சர்வதேச கிரிக்கெட்டில் டாப் 10 பணக்கார கிரிக்கெட் வாரியங்களின் பட்டியலில் பிசிசிஐ முதலிடம் பிடித்துள்ளது.

விளையாட்டில் அதிக சிறப்பு வாய்ந்த ஒரு விளையாட்டாக இருப்பது கிரிக்கெட். சிறுவர்கள் முதல் பெண்கள், வயதான பெரியவர்கள் வரையில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளது கிரிக்கெட். இதில், டி20, ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் என்று பல வகையான பார்மேட்டுகள் உண்டு. டி20 போட்டி என்றாலே அதிரடி, சிக்ஸ் மற்றும் பவுண்டரிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அண்மை காலங்களாக டி20 கிரிக்கெட் போட்டிகள் அதிகளவில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் டி20 கிரிக்கெட் அதிகளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வளர்ச்சிக்குழு தலைவராக சஞ்சய் பங்கர் நியமனம்!

ஒவ்வொரு ஆண்டும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் மூலமாக உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக பிசிசிஐ உயர்ந்துள்ளது. இந்த நிலையில், பிசிசிஐயின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, பிசிசிஐயின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.18,760 கோடி. இது. ஆஸ்திரேலியாவை விட 28 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்சிபி அணியில் விளையாடி டிராபி வெல்ல வேண்டும் – ஆஃப்கான் வீரர் இப்ராஹிம் ஜத்ரன்!

ஆஸ்திரேலியா 2ஆவது அதிக சொத்து மதிப்பு கொண்ட வாரியங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா வாரியத்தின் சொத்து மதிப்பு ரூ.658 கோடி ஆகும். இந்தப் பட்டியலில் 3ஆவது இடத்தில் இங்கிலாந்து உள்ளது. இதனுடைய சொத்து மதிப்பு ரூ.492 கோடி ஆகும். நான்காவது இடத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்ளது. இதனுடைய சொத்து மதிப்பு ரூ.458 கோடி.

WPL 2024 Auction: நாளை மும்பையில் நடக்கும் மகளிர் பிரீமியர் லீக் ஏலம்!

இதையடுத்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் ரூ.425 கோடி சொத்து மதிப்புகளுடன் 5ஆவது இடத்திலும், ரூ.392 கோடி சொத்து மதிப்புகளுடன் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் 6ஆவது இடத்திலும், ரூ.317 கோடி சொத்து மதிப்புகளுடன் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் 7ஆவது இடத்திலும் உள்ளன. அடுத்ததாக, இலங்கை ரூ.166 கோடி, வெஸ்ட் இண்டீஸ் ரூ.125 கோடி, நியூசிலாந்து ரூ.75 கோடி என்று அடுத்தடுத்த இடங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

BAN vs NZ 2nd Test: 180 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து; 3ஆம் நாள் முடிவில் வங்கதேசம் 30 ரன்கள் முன்னிலை!

Scroll to load tweet…