பஞ்சாப் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வளர்ச்சிக்குழு தலைவராக சஞ்சய் பங்கர் நியமனம்!
இந்திய அணியின் முன்னாள் வீரரும், பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வளர்ச்சிக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
PBKS Players List
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் 19 ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. இந்த ஏலத்திற்கு 1166 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இதில், இந்தியாவிலிருந்து 830 வீரர்களும், 336 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
Punjab Kings IPL 2024 Auction
இந்த 1166 வீரர்களில் 77 இடங்கள் மட்டுமே நிரப்ப முடியும். ஐபிஎல் தொடர் நடக்க இருப்பதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும், தங்களது அணியின் பேட்டிங், பவுலிங், ஆலோசகர் என்று ஒவ்வொருவரையும் மாற்றி வருகிறது.
Cricket Development
ஏற்கனவே லக்னோ அணியிலிருந்த கவுதம் காம்பீர் மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கே சென்றுள்ளார். இதே போன்று பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் யுவராஜ் சிங், சங்கக்காரா, ஜெயவர்தனே, கில்கிறிஸ்ட், ஹஸ்ஸி, பெய்லி, சேவாக், மில்லர், முரளி விஜய், மேக்ஸ்வெல், ரவிச்சந்திரன் அஸ்வின், கேஎல் ராகுல், மாயங்க் அகர்வால், ஷிகர் தவான், சாம் கரண் என்று ஒவ்வொருவரும் கேப்டன்களாக இருந்துள்ளனர்.
PBKS
பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து பனுகா ராஜபக்சா, மோகித் ரதி, ராஜ் பவா, பல்தேஜ் சிங், ஷாருக் கான் என்று 5 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்தநிலையில் தான் ஏலத்திற்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணியானது கிரிக்கெட் வளர்ச்சிக்குழு தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பங்கரை நியமித்துள்ளது.
Punjab Kings
இது தொடர்பாக சஞ்சய் பங்கர் கூறியிருப்பதாவது: பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இணைந்தது மகிழ்ச்சி. 5 வீரர்களை மட்டுமே விடுவித்துள்ளோம். பிளேயிங் லெவனுக்கான வீரர்கள் இருக்கிறார்கள். இந்த அணிக்கு பக்க பலமாக இருக்கும் வகையில் செயல்பட தொடங்கியுள்ளோம் என்று கூறியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் 12.20 கோடி கைவசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.