இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 25 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த மண்ணில் கைப்பற்றியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கைப்பற்றியது. 2ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
WPL 2024 Auction: ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரையில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட 5 வீராங்கனைகள்!
இதன் மூலமாக இரு அணிகளும் 1-1 என்று சமனில் இருந்தன. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3ஆவது ஒருநாள் போட்டி நேற்று பார்படாஸில் நடந்தது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இதில், பென் டக்கெட் 73 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்ஸ் உள்பட 71 ரன்கள் குவித்தார். லியாம் லிவிங்ஸ்டன் 56 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸ் உள்பட 45 ரன்கள் குவித்தார்.
இறுதியாக இங்கிலாந்து 40 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. அப்போது மழை குறுக்கிடவே, ஓவர்களும், ரன்னும் குறைக்கப்பட்டது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணியானது 34 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றும், 1 முதல் 7 ஓவர்கள் பவர்பிளே ஓவர்களாக அறிவிக்கப்பட்டது. பவுலிங்கைப் பொறுத்த வரையில், மேத்யூ ஃபோர்டு மற்றும் அல்ஜாரி ஜோசஃப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ரொமாரியோ ஷெப்பர்டு 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பின்னர் எளிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியில் அலிக் அத்தானாஸ் 51 பந்துகளில் 7 பவுண்டரி உள்பட 45 ரன்கள் குவித்தார்.
பிரண்டன் கிங் 1 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கீசி கார்டி 58 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்ஸ் உள்பட 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியாக வந்த ரொமாரியோ ஷெப்பர்ட் 28 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸ் உள்பட 41 ரன்கள் எடுக்க, மேத்யூ ஃபோர்டு 13 ரன்கள் எடுக்கவே வெஸ்ட் இண்டீஸ் அணி 31.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்து, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக வெஸ்ட் இண்டீஸ் அணியானது 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்று கைப்பற்றியுள்ளது. அதுவும், சொந்த மண்ணில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் தொடரை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 1998 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி இருந்தது. அதன் பிறகு தற்போது தான் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது
