நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிகளுக்கு இடையிலான டிஎன்பிஎல் 2024 தொடரின் 14ஆவது போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 தொடரின் 8ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிகளுக்கு இடையிலான 14ஆவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணியின் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், கேப்டன் அருண் கார்த்திக் மற்றும் ஆர் எஸ் மோகித் ஹரிஹரன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்ததாக வெளியான வீடியோ – பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ஹர்பஜன் சிங், ரெய்னா!

எனினும் ஹரிஹரன் 4 பந்துகள் பிடித்த நிலையில் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக அஜிதேஷ் குருசாமி களமிறங்கினார். அவர் 12 ரன்களில் நடையை கட்ட என் எஸ் ஹரிஷ் களமிறங்கினார். போட்டி தொடங்குவதற்கு முன்பிருந்தே கோவையில் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக இரவு 7.15 மணிக்கு தொடங்க இருந்த போட்டியானது 17 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டு இரவு 8.40 மணிக்கு தொடங்கப்பட்டது. போட்டியின் 5.2 ஆவது ஓவரில் மீண்டும் மழை கொட்டியது. தொடர்ந்து மழை பெய்த நிலையில் இரவு 10.11 மணிக்கு போட்டியானது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நடப்பு தொடரில் முதல் முறையாக ஒரு போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது மதுரை அணிக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

Paris 2024 Olympics Mascots: ஒலிம்பிக் தொடக்க விழா, போட்டி நடைபெறும் இடங்கள், சின்னங்கள் பற்றி தெரியுமா?

ஏற்கனவே விளையாடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் இருந்தது. எஞ்சிய 4 போட்டியிலும் மதுரை அணி ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது அந்த அணிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதுவரையில் 4 போட்டியில் ஒரு வெற்றி பெற்றுள்ள மதுரை எஞ்சிய 3 போட்டியிலும் அதிக நெட்ரன் ரேட் அடிப்படையில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்ட விளையாட்டு எது? புதிதாக இடம் பெறும் விளையாட்டுகள் என்னென்ன்?

கடந்த சீசனில் விளையாடிய 7 போட்டியில் 4 வெற்றி, 3 தோல்விகளுடன் மதுரை 4ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது. நெல்லை ராயல் கிங்ஸ் அணியானது விளையாடிய 4 போட்டியில் 2ல் வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் நெல்லை 5 வெற்றிகளுடன் 3ஆவது அணியாக பிளே ஆஃப் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.