உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் தொடரில் சாம்பியன் டிராபி வென்ற நிலையில் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெயனா ஆகியோர் தோபா தோபா என்ற பாடலுக்கு நடனம் ஆடியது மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்ததாக சர்ச்சையான நிலையில் ஹர்பஜன் மற்றும் ரெய்னா ஆகியோர் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் தொடரில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் அணியானது டிராபி கைப்பற்றியது. இதையடுத்து யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் அண்மையில் வெளியான ஹிந்தி பாடலான தோபா தோபா என்ற பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டிருந்தனர். அதில், அவர்கள் நடந்து செல்வது மாற்று திறனாளிகளை இழிவுபடுத்துவது போன்று இருந்துள்ளது. இதன் காரணமாக மாற்றுத் திறனாளிகள் சமூகத்தினர் அந்த வீடியோவை நீக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Paris 2024 Olympics Mascots: ஒலிம்பிக் தொடக்க விழா, போட்டி நடைபெறும் இடங்கள், சின்னங்கள் பற்றி தெரியுமா?

Scroll to load tweet…

இந்த நிலையில் தான் ஹர்பஜன் சிங் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: யாருடைய மனதையும் புண்படுத்த் விரும்பவில்லை. தனிமனிதனையும் மற்றும் சமூகத்தையும் நாங்கள் மதிக்கிறோம். நாங்கள் 15 நாட்கள் கிரிக்கெட் விளையாடியதால் எங்களது உடல் வலி எப்படி இருந்தது என்பதை பிரதிபலிக்கும் வகையில் தான் அந்த வீடியோ இருந்தது.

ஒரே நாளில் ஒரு கோடி லைக்ஸ் – ஆனந்த் - ராதிகா தம்பதியினரை வாழ்த்தி தோனி போட்ட பதிவிற்கு கிடைத்த வரவேற்பு!

நாங்கள் யாரையும் இழிவுபடுத்த முயற்சிக்கவில்லை. இன்னமும் நாங்கள் தவறு செய்துவிட்டதாக மக்கள் நினைத்தால், என தரப்பிலிருந்து நான் முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதனையோ இதோடு நிறுத்திவிடுங்கள். மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருங்கள். அன்புடன் ஹர்பஜன் சிங் என்று பதிவிட்டுள்ளார். ஹர்பஜன் சிங்கின் இந்த பதிவை சுரேஷ் ரெய்னா பகிர்ந்துள்ளார். அதோடு தனது இன்ஸ்கிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்ட விளையாட்டு எது? புதிதாக இடம் பெறும் விளையாட்டுகள் என்னென்ன்?

Scroll to load tweet…