ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் தம்பதியினரை வாழ்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி பதிவிட்ட பதிவு ஒன்று ஒரே நாளில் 9,169,94 லைக்ஸ் வரை பெற்றுள்ளது.

உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி மற்றும் பிரபல தொழிலபதிபர் விரென் மெர்ச்சண்டின் இளைய மகன் ராதிகா மெர்ச்சண்டுக்கும் கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மிக பிர்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த சினிமா உலகமும், கிரிக்கெட் பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போது இதே போன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கிரிக்கெட், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இத்தாலி நாட்டு கடற்கரையில் சொகுசு கப்பலில் 3 நாள் பயணமாக வெகு சிறப்பாக ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்ட விளையாட்டு எது? புதிதாக இடம் பெறும் விளையாட்டுகள் என்னென்ன்?

இதில் எம்.எஸ்.தோனி தனது மனைவி சாக்‌ஷி மற்றும் மகள் ஜிவா உடன் கலந்து கொண்டார். மேலும், கிரிக்கெட் மற்றும் சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். கடந்த 12 ஆம் தேதி மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் ஆனந்த் மற்றும் ராதிகா திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் WWE வீரர் ஜான் சீனா கலந்து கொண்டார்.

Olympics 2024: ஒலிம்பிக் 2024 தொடக்க விழாவில் மூவர்ணக் கொடியை ஏந்தி அணிவகுப்பு நடத்தும் பிவி சிந்து!

இந்த நிலையில் திருமணம் செய்து கொண்ட ஆனந்த் மற்றும் ராதிகா தம்பதியினரை வாழ்த்தி தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ராதிகா உங்களது புன்னகை என்றும் மறையாது. ஆனந்த் உங்களை சுற்றியிருப்பவர்களிடம் நீங்கள் காட்டும் அதே அன்புடனும், கருண்டையுடனும் ராதிகாவை தொடர்ந்து அன்புடன் கவனித்துக் கொள்ளுங்கள். உங்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சி மற்றும் சாகசம் நிறைந்ததாக இருக்கட்டும். வாழ்த்துக்கள்…விரைவில் சந்திப்போம் நண்பர்களே என்று பதிவிட்டுள்ளார். நேற்று இரவு பதிவிட்ட இந்தப் பதிவானது ஒரே நாளில் 9,169,94 லைக்ஸ்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

View post on Instagram