T20I Squad:ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – கேப்டனாக திரும்ப வந்த ரோகித் சர்மா!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Team India Squad for 3 Match T20I Series Against Afghanistan Announced now and Rohit Sharma and Virat Kohli are part in T20 Squad rsk

கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தனர். இதன் காரணமாக டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா விளையாடினர். இதில், ஹர்திக் பாண்டியா காயம் அடைந்து வெளியேறிய நிலையில், உலகக் கோப்பை தொடருக்கு பிறகு நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு சூர்யக்மார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதில், 4-1 என்று தொடரை கைப்பற்றினார்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெற வேண்டும் – கங்குலி!

இதே போன்று தென் ஆப்பிரிக்காவில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதில், 1-1 என்று டி20 தொடரை இந்திய அணி சமன் செய்தது. இதையடுத்து ஒருநாள் தொடருக்கு பிறகு ஒருநாள் தொடர்களில் சற்று ஓய்வு எடுத்துக் கொண்ட ரோகித் சர்மாவிற்கு பதிலாக கேஎல் ராகுல் ஒருநாள் தொடருக்கு கேப்டனாக செயல்பட்டார். இந்த தொடரை இந்திய அணி 2-1 என்று கைப்பற்றியது.

இது தான் நேரம் இந்தியாவின் அழகை ரசிக்க தொடங்குங்கள் - இந்தியர்களுக்கு எதிரான கருத்துக்கு சச்சின் பதிலடி!

பின்னர் நடந்த டெஸ்ட் தொடருக்கு மட்டுமே ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். இந்த நிலையில் தான் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கும் நிலையில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாட ஆர்வம் காட்டியுள்ளனர். இதன் காரணமாக உலகக் கோப்பை தொடருக்கான ஒரு முன்னோட்டமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இடம் பெற்றுள்ளனர்.

Sakshi Pant Engagement: ரிஷப் பண்ட் சகோதரி சாக்‌ஷி திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோனி!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலியுடம் டி20 தொடருக்கு திரும்ப வந்துள்ளார். விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனும் அணிக்கு திரும்பியுள்ளார். கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை.

டி20 தொடருக்கான இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார்.

இங்கிலாந்திற்கு எதிரான பயிற்சி போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு!

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 11 ஆம் தேதி தொடங்குகிறது. 2ஆவது போட்டி 14ஆம் தேதியும், 3ஆவது டி20 போட்டி 17ஆம் தேதியும் நடக்கிறது. இதுவரையில் 148 டி20 போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா, 3853 ரன்களும், 4 சதங்கள் மற்றும் 29 அரைசதங்களும் அடித்துள்ளார். இதில், அதிகபட்சமாக 118 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

David Warner Test Cricket Retirement: மனைவி தான் என்னுடைய உலகமே – டேவிட் வார்னர் நெகிழ்ச்சி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios