இங்கிலாந்திற்கு எதிரான பயிற்சி போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு!
டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணியுடன் பயிற்சி போட்டியில் விளையாட இந்திய ஏ அணியில் தமிழக வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் பிரதோஷ் ரஞ்சன் பால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. வரும் 25ஆம் தேதி முதல் மார்ச் 11ஆம் தேதி வரையில் இந்த டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து 2 பயிற்சி போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதலில் 2 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியும், அதன் பிறகு 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியும் நடக்க இருக்கிறது. இதில், இந்திய ஏ அணி பங்கேற்க உள்ளது.
ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி – ஹர்திக் பாண்டியாவிற்கு ஆப்பு மேல ஆப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடும் இந்தியா ஏ அணியில் இடம்பிடித்துள்ள 12 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த பிரதோஷ் ரஞ்சன் பால், சாய் சுதர்சன் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கேப்டனாக அபிமன்யூ ஈஸ்வர தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், ரஜத் பட்டிதார், சர்ஃபராஸ் கான் துருவ் ஜுரெல், கேஎஸ் பரத், மானவ் சுதர், புல்கித் நரங், நவ்தீப் சைனி, துஷார் தேஷ்பாண்டே, வித்வாத் காவேரப்பா, ஆகாஷ் தீப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 நாட்கள் கொண்ட முதல் பயிற்சி போட்டி வரும் ஜனவரி 12 மற்றும் ஜனவரி 13 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
இதைத் தொடர்ந்து நடக்கும் 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியானது வரும், 17 முதல் ஜனவரி 20 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் ரஞ்சி டிராபி தொடர் நடந்து வரும் நிலையில், தற்போது இங்கிலாந்திற்கு எதிராக பயிற்சி போட்டியும் நடக்க இருக்கிறது.
David Warner Test Cricket Retirement: மனைவி தான் என்னுடைய உலகமே – டேவிட் வார்னர் நெகிழ்ச்சி!