Dhoni Hookah Smoking Video: மாஸான ஸ்டைலிஷ் லுக்கில் சிகரெட் பிடித்து புகையை ஊதி தள்ளும் தோனியின் வீடியோ வைரல்!

ஸ்டைலிஷான லுக்கில் ஹூக்கா புகைத்தபடி நின்ற தோனியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MS Dhoni Hookah Smoking Video Goes Viral in Social Media rsk

இந்திய அணிக்கு டி20, ஒரு நாள் கிரிக்கெட், சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் தோனி, தனது ஓய்வு நேரத்தை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் 5 முறை சாம்பியன் டைட்டில் வென்று கொடுத்துள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, முன்னாள் அணி வீரர்களுக்கு விருந்து கொடுப்பது முதல் நண்பர்கள், குடும்பத்தினருடன் நாடு முழுவதும் சுற்று பயணம் என்று ஓய்விற்கு பிறகான தனது பொன்னான நேரத்தை அனுபவித்து வருகிறார்.

தற்போது 42 வயதான நிலையிலும் தனது உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார். இந்த வயதிலும் கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் ஒருவராக இருக்கிறார். சமூக வலைதளத்தில் தோனி குறித்து வீடியோ வெளிவராத நாள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவரது வீடியோ தினந்தோறும் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தோனி ஹூக்கா புகைப்பது போன்று காட்சி பெற்றுள்ளது.

David Warner Test Cricket Retirement: மனைவி தான் என்னுடைய உலகமே – டேவிட் வார்னர் நெகிழ்ச்சி!

எப்போதும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களது திறமைகளை வெளிக்காட்டும் வீரர்களில் ஒருவராக தோனி இருப்பார். இந்த நிலையில், தான் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஜார்ஜ் பெய்லி 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவால் பகிரப்பட்ட ஒரு டிரிபூட் வீடியோவில், தோனி குறித்து யாரும் அறிந்திராத முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தோனிக்கு ஷீஷா அல்லது ஹூக்கா புகைப்பது பிடிக்கும். அதனை அவர் தனது வீட்டில் அடிக்கடி பயன்படுத்துவார். இளம் வீரர்களுடனும் பயன்படுத்துவார்.

T20 World Cup 2024: இந்தியா விளையாடும் போட்டி மட்டும் அமெரிக்காவில் நடத்தப்பட காரணம் என்ன தெரியுமா?

தோனியின் அறை எப்போதும் திறந்தே இருக்கும். வீரர்கள் எப்போது வேண்டுமானாலும், அவரிடம் சென்று உரையாடலாம். கிரிக்கெட்டில் என்ன நடந்தாலும் சரி எப்போதும் அமைதியாக இருப்பார். அவர் விக்கெட் கீப்பராக இருந்தாலும் சரி, பேட்ஸ்மேனாக இருந்தாலும் சரி தான், அமைதியாகத்தான் இருப்பார் என்று கூறியுள்ளார். கடந்த 2009 மற்றும் 2012 ஆம் ஆண்டு வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர் ஜார்ஜ் பெய்லி. 2016 ஆம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியிலும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்ட ரசிகர்கள் – டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற டேவிட் வார்னர்!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios