Asianet News TamilAsianet News Tamil

இது தான் நேரம் இந்தியாவின் அழகை ரசிக்க தொடங்குங்கள் - இந்தியர்களுக்கு எதிரான கருத்துக்கு சச்சின் பதிலடி!

பிரதமர் மோடி மற்றும் இந்தியர்கள் குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் இழிவான கருத்துக்களை பதிவிட்ட நிலையில் இந்திய ஜாம்பவான்களான சச்சின், வெங்கடேஷ் பிரசாத், ஆகாஷ் சோப்ரா ஆகியோர் பதிலடி கொடுத்துள்ளனர்.

Sachin Tendulkar, Venkatesh Prasad Aakash Chopra are exposes their thoughts to Maldives boycott in response to anti India rsk
Author
First Published Jan 7, 2024, 4:45 PM IST

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவிற்கு பயணம் செய்து, அங்குள்ள அழகிய கடற்கரை, தெளிவான கடல் நீர் ஆகியவற்றின் அழகை கண்டு வியந்த அவர், மக்களை லட்சத்தீவிற்கு வரும்படி அழைத்தார். இதையடுத்து லட்சத்தீவு குறித்து கூகுளில் தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும் இனி வரும் காலங்களில் லட்சத்தீவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் பிரதமரது இந்த முயற்சி மாலத்தீவிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற நிலையில், மாலத்தீவு அமைச்சர் மரியம் ஷியுனா, பிரதமர் மோடி மற்றும் இந்தியர்கள் குறித்து இழிவான கருத்துக்களை பதிவிட்ட நிலையில் அதனை நீக்கியுள்ளார். மேலும், அவர் மாலத்தீவிற்கு வருவதை ஊக்குவித்துள்ளார்.

Sakshi Pant Engagement: ரிஷப் பண்ட் சகோதரி சாக்‌ஷி திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோனி!

இந்த நிலையில் தான் மாலத்தீவிற்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு முன்பதிவு செய்திருந்த பலரும் தங்களது சுற்றுலா பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். முன்னதாக, பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை தங்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பலரும் அதன் அழகை விவரித்தனர். அவரது பயணம் மாலத்தீவின் சுற்றுலாவுக்கு பின்னடைவாக அமையும் எனவும், லட்சத்தீவின் சுற்றுலாவை அதிகரிக்கும் எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இங்கிலாந்திற்கு எதிரான பயிற்சி போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு!

இந்த நிலையில், தான் இந்த இந்திய எதிர்ப்பு உணர்வுகளுக்கு பதிலடியாக, இந்திய பிரபலங்கள் மாலத்தீவு புறக்கணிப்பு பிரச்சாரத்தை தீவிரமாக ஆதரிக்கின்றனர். இந்த விஷயத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தினார். இந்தியா அவுட்’தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக இருந்தது. மாலத்தீவுகள் அதற்கு வாக்களித்தன. இனி, புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுப்பது இந்தியர்களாகிய நம் கையில் உள்ளது. என் குடும்பத்தினர் செய்வார்கள் என்று எனக்குத் தெரியும். ஜெய் ஹிந்த் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி – ஹர்திக் பாண்டியாவிற்கு ஆப்பு மேல ஆப்பு!

இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சிந்துதுர்க்கில் எனது 50வது பிறந்தநாளில் ஒலித்ததில் இருந்து 250+ நாட்கள்! கடற்கரை நகரம் நாங்கள் விரும்பும் அனைத்தையும் வழங்கியது. அற்புதமான விருந்தோம்பலுடன் இணைந்த அழகிய இடங்கள் நினைவுகளின் பொக்கிஷத்தை எங்களிடம் விட்டுச் சென்றன.

 

 

 

Dhoni Hookah Smoking Video: மாஸான ஸ்டைலிஷ் லுக்கில் சிகரெட் பிடித்து புகையை ஊதி தள்ளும் தோனியின் வீடியோ வைரல்!

இந்தியா அழகான கடற்கரைகள் மற்றும் அழகிய தீவுகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. எங்களுடைய “அதிதி தேவோ பவ” தத்துவத்துடன், நாம் ஆராய்வதற்கு எவ்வளவோ இருக்கிறது, பல நினைவுகள் உருவாக்க காத்திருக்கின்றன,” என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு, கடற்கரையில் கிரிக்கெட் விளையாடும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இதன் மூலமாக சச்சின் இந்தியாவின் வளமான கடலோர மற்றும் தீவு சலுகைகளை வலியுறுத்தினார். பல்வேறு நிலப்பரப்புகளை ஆராய்ந்து நீடித்த நினைவுகளை உருவாக்க சக நாட்டு மக்களை ஊக்குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

David Warner Test Cricket Retirement: மனைவி தான் என்னுடைய உலகமே – டேவிட் வார்னர் நெகிழ்ச்சி!

 

 

இவரைத் தொடர்ந்து முன்னாள் இந்திய அணி வீரர் வெங்கடேஷ் பிரசாத் கூறியிருப்பதாவது: இந்தியாவில் இருந்து 15%க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுள்ள மாலத்தீவுகள் பெரும்பாலும் உயர்மட்ட சுற்றுலாவையே பெரிதும் நம்பியிருக்கும் ஏழ்மையான நாடாகும். இந்தியாவில் பல ஆராயப்படாத அழகான கடற்கரை நகரங்கள் உள்ளன, மேலும் அவற்றில் பலவற்றை சுற்றுலா தலங்களாக உருவாக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios