டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெற வேண்டும் – கங்குலி!
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமான சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்பதை உறுதிப்படுத்தினார். இந்திய கிரிக்கெட் அணியின் 2 வழக்கமான கேப்டன்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக குறுகிய வடிவத்தில் இல்லாததால், T20 உலகக் கோப்பையில் அவர்கள் பங்கேற்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவியது.
இந்த நிலையில் தான் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கங்குலி கூறியிருப்பதாவது: டி20 உலகக் கோப்பையின் போது விராட் மற்றும் ரோகித் இருவரும் இந்திய ஜெர்சியை அணிவார்கள். “உலகக் கோப்பையில் அவர்கள் நன்றாக விளையாடினார்கள். அவர்கள் இந்திய கிரிக்கெட்டின் முக்கிய அங்கம். உலகக் கோப்பைகள் வழக்கமான தொடர்களிலிருந்து வேறுபட்டவை. அழுத்தம் அதிகமாக உள்ளது. இந்த உலகக் கோப்பையில் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள், மேலும் ஆறு முதல் ஏழு மாதங்களில் மேற்கிந்தியத் தீவுகளில் அவர்கள் மீண்டும் சிறந்த முறையில் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன், என்று அவர் கூறினார்.
இந்த டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா வரும் ஆப்கானிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் 11 ஆம் தேதி மொகாலியில் நடக்கிறது. இதையடுத்து 2ஆவது போட்டி 14 ஆம் தேதி இந்தூரிலும், 3ஆவது டி20 போட்டி 17ஆம் தேதி பெங்களூருவிலும் நடக்கிறது.
டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக நடக்கும் இந்த டி20 தொடர் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அணியில் இடம் பெறுவார்கள் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்திற்கு எதிரான பயிற்சி போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு!
இதற்கு முன்னதாக இருவரும் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றனர். இதில் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து இருவரும் டி20 போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் தான் மீண்டும் டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெற ஆயத்தமாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.
David Warner Test Cricket Retirement: மனைவி தான் என்னுடைய உலகமே – டேவிட் வார்னர் நெகிழ்ச்சி!