BAN vs IND: 3வது ஒருநாள் போட்டிக்கு முன் இந்திய அணிக்கு கவாஸ்கர் கடும் எச்சரிக்கை
வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிக்கு முன்பாக இந்திய அணியை கடுமையாக எச்சரித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.
இந்தியா - வங்கதேசம் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று வங்கதேச அணி ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி நாளை நடக்கிறது.
காயம் காரணமாக கடைசி ஒருநாள் போட்டியிலிருந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகிய 3 வீரர்களும் விலகினர். ரோஹித்துக்கு 2வது போட்டியின்போது கை கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. 3 வீரர்கள் ஒருநாள் அணியிலிருந்து விலகிய நிலையில், இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் சைனாமேன் பவுலர் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2023: Impact Player விதி இந்திய வீரர்களுக்கு மட்டுமே பொருந்தும்..? தெளிவுபடுத்துமா பிசிசிஐ..?
ஒருநாள் தொடருக்கு பின் டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ள நிலையில், ஒருநாள் தொடரை இழந்துவிட்டாலும், கடைசி போட்டியில் ஜெயிப்பது, டெஸ்ட் தொடருக்கான தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பதால் கடைசி போட்டியில் வலுவான அணி காம்பினேஷனுடன் களமிறங்கி வெற்றி பெற வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு
இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், இந்திய அணி வலுவான காம்பினேஷனை தேர்வு செய்ய வேண்டும். டெஸ்ட் போட்டிக்கு முன்பாக நம்பிக்கையும் ஊக்கமும் ஊட்டும் வெற்றியாக அந்த வெற்றி அமையும். ஏனெனில், டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் பெரும்பாலானோர் ஒருநாள் அணியில் உள்ளவர்கள் தான். ஒருநாள் அணியும் டெஸ்ட் அணியும் கிட்டத்தட்ட ஒரே அணிதான். பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அசத்தும் வங்கதேசத்துக்கு எதிராக கடைசி போட்டியில் இந்திய அணி ஜெயிப்பது சவாலான காரியமாக இருக்கும். ஆனால் இந்திய அணி ஜெயித்தாக வேண்டும் என்று கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.