ஐபிஎல் 2023: Impact Player விதி இந்திய வீரர்களுக்கு மட்டுமே பொருந்தும்..? தெளிவுபடுத்துமா பிசிசிஐ..?
ஐபிஎல் 16வது சீசனில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் Impact Player என்ற விதியின் கீழ் 12வது வீரராக வெளிநாட்டு வீரரை பயன்படுத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து பிசிசிஐ விரைவில் தெளிவுபடுத்தும் என்று தெரிகிறது.
டி20 கிரிக்கெட் தான் இன்றைய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற கிரிக்கெட் ஃபார்மட். அதற்கு காரணம் மூன்றரை மணி நேரத்தில் முடிந்துவிடும் டி20 கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்காக அமைந்துள்ளது. அதனால் டி20 கிரிக்கெட்டை மேலும் பரபரப்பாகவும் விறுவிறுப்பானதாகவும் மாற்ற பல புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அந்தவகையில், ஐபிஎல்லில் Impact Player என்ற புதிய சுவாரஸ்யமான விதியை பிசிசிஐ அறிமுகப்படுத்துகிறது.
BAN vs IND: கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்ப்பு.. கேஎல் ராகுல் கேப்டன்
பொதுவாக டாஸ் போடும்போது கேப்டன்கள் தங்கள் அணிகளின் ஆடும் லெவனை அறிவிப்பார்கள். அவர்களுடன் 4 மாற்று வீரர்களின் பெயர்களையும் அறிவிப்பார்கள். ஆடும் லெவன் வீரர்களில் யாராவது காயத்தால் ஆடமுடியாமல் போனால் அவர்கள் ஆடலாம். ஆனால் மாற்று வீரர்கள் பேட்டிங்கோ, பவுலிங்கோ செய்ய முடியாது. ஃபீல்டிங் மட்டுமே செய்யலாம்.
இந்நிலையில், இப்போது பிசிசிஐ அறிமுகப்படுத்தும் புதிய விதியின் மூலம், ஆடும் லெவனுடன் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என்று ஒரு வீரரை எடுத்துக்கொள்ளலாம். ஆட்டத்தில் ஏதாவது ஒரு வீரருக்கு பதிலாக அந்த வீரரை பயன்படுத்த நினைத்தால் பயன்படுத்திக்கொள்ளலாம். போட்டி நடக்கும் ஆடுகளத்தின் கண்டிஷனை சரியாக கணிக்காமல், ஆடும் லெவனை தேர்வு செய்திருந்தால், பின்னர் போட்டி நடந்துகொண்டிருக்கும்போது கேப்டன் அதை உணர்ந்தால், “தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்” என்று எடுக்கப்பட்ட வீரரை ஆட்டத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சில நேரங்களில் ஆடும் லெவனில் இடம்பிடிக்க 2 வீரர்களுக்கு இடையே கடும்போட்டி நிலவும். இனிமேல் அப்படியான சூழலில் அவர்களில் ஒருவரை ஆடும் லெவனிலும், மற்றொருவரை Impact Player ஆக எடுக்கலாம்.
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு
ஐபிஎல்லில் ஒரு அணி 4 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே ஆடும் லெவனில் எடுக்க முடியும் என்பதால், இந்த Impact Player விதியின் மூலம் 12வது வீரராக வெளிநாட்டு வீரரை எடுக்கலாமா என்ற சந்தேகம் ஐபிஎல் அணிகளிடம் உள்ளது. அல்லது, Impact Player ஆக இந்திய வீரரை மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா என்ற கேள்வியும் உள்ளது. 4 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே ஆடவைக்க முடியும் என்ற விதி இருப்பதால், Impact Playerஆக இந்திய வீரரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று தெரிகிறது. இதுதொடர்பான குழப்பம் இருப்பதால், பிசிசிஐ விரைவில் தெளிவுபடுத்தும் என்று தெரிகிறது.