டெஸ்ட் போட்டியில் ODI போட்டியை போல பேட்டிங் ஆடிய இங்கி.,! அறிமுக டெஸ்ட்டில் 7 விக்கெட் வீழ்த்திய அப்ரார் அகமது

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 51.4 ஓவரில் 281 ரன்களை குவித்து இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது.
 

england all out for 281 runs in first innings of second test and pakistan spinner abrar ahmed takes 7 wickets in debut test

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி இன்று முல்தானில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணி:

ஜாக் க்ராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ஆலி ராபின்சன், ஜாக் லீச், மார்க் உட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

AUS vs WI: லபுஷேன், டிராவிஸ் ஹெட் அபார சதம்..! முதல் இன்னிங்ஸில் மெகா ஸ்கோர் அடித்து ஆஸ்திரேலியா டிக்ளேர்

பாகிஸ்தான் அணி:

அப்துல்லா ஷாஃபிக், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், சௌத் ஷகீல், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஜாஹித் மஹ்மூத், முகமது லி, அப்ரார் அகமது.

இங்கிலாந்து வீரர்கள் தொடக்கம் முதலே அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தனர். தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி 19 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான பென் டக்கெட் மற்றும் ஆலி போப் ஆகிய இருவரும் அடித்து ஆடி அரைசதம் அடித்தனர். பென் டக்கெட் 49 பந்தில் 63 ரன்களும், ஆலி போப் 61 பந்தில் 60 ரன்களும் அடித்தனர். ஜோ ரூட் (8), ஹாரி ப்ரூக் (9) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.

அதன்பின்னர் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 30 ரன்களும், வில் ஜாக்ஸ் 31 ரன்களும் அடித்தனர். பின்வரிசையில் மார்க் உட் அடித்து ஆடி 27 பந்தில் 36 ரன்கள் அடிக்க, 51.4 ஓவரில் 281 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி.  இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டியில் ஆடுவதை போல அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்து ஆல் அவுட்டானது.

BAN vs IND: 3 வீரர்கள் விலகல்.. 3வது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி

இந்த போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான பாகிஸ்தான் ரிஸ்ட் ஸ்பின்னர் அப்ரார் அகமது அறிமுக போட்டியிலேயே 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios