BAN vs IND: 3 வீரர்கள் விலகல்.. 3வது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி
வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் தோற்று இந்திய அணி தொடரை இழந்துவிட்டது.
கடைசி ஒருநாள் போட்டி வரும் 10ம் தேதி தாக்காவில் நடக்கிறது. அந்த போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பிலும், இந்திய அணியை கடைசி போட்டியிலும் வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் வங்கதேச அணியும் களமிறங்குகின்றன.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகிய 3 வீரர்களும் காயம் காரணமாக கடைசி ஒருநாள் போட்டியிலிருந்து விலகியுள்ளனர். கடைசி போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ரோஹித் சர்மா ஆடாததால் ஷிகர் தவான் கேப்டன்சி செய்வார். ஷிகர் தவானுடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக இறங்குவார். மிடில் ஆர்டரில் ஆட ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல் ஆகிய இருவரும் ஸ்பின்னர்களாகவும், ஷர்துல் தாகூர் முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய மூவரும் ஃபாஸ்ட் பவுலர்களாகவும் ஆடுவார்கள்.
பேட்டிங் ஆட முடியும்னா, ஏன் முன்னாடியே இறங்கல..? ரோஹித்தை விளாசிய கவாஸ்கர்
உத்தேச இந்திய அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.