இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு
இந்தியாவிற்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் 2 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று வங்கதேச அணி ஒருநாள் தொடரை வென்றுவிட்டது. கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.
அதன்பின்னர் டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 14ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சீனியர் வீரரும் ஆல்ரவுண்டருமான ஷகிப் அல் ஹசன் கேப்டன்சியிலான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச டெஸ்ட் அணி:
மஹ்முதுல் ஹசன் ஜாய், மோமினுல் ஹக், டஸ்கின் அகமது, முஷ்ஃபிகுர் ரஹிம், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), ஷோரிஃபுல் இஸ்லாம், நூருல் ஹசன், மெஹிடி ஹசன் மிராஸ், டைஜுல் இஸ்லாம், நஜ்முல் ஹசன் ஷாண்டோ, சையத் காலித் அகமது, எபடாட் ஹுசைன், யாசிர் அலி சௌத்ரி, ஜாகீர் ஹசன், லிட்டன் தாஸ், ரஹ்மான் ராஜா, அனாமுல் ஹக்.
BAN vs IND: 3 வீரர்கள் விலகல்.. 3வது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.