இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக மணல் சிற்ப கலைஞர் துர்கா தேவியின் மணல் சிற்பத்தை வரைந்து வழிபாடு செய்துள்ளார்.
இந்தியாவில் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், 10 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. இந்தியா விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகள் பெற்று ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணியும் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணி விளையாடிய 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 2 வெற்றி ஒரு தோல்வியுடன் 4ஆவது இடத்திலும் உள்ளன. ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் புள்ளிப்பட்டியலில் முதலில் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இலங்கை அணி தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்திலும், நெதர்லாந்து விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளன. இந்த நிலையில் தான் பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் கர்நாடகா மாநிலத்தில் உள்ள விஜபூர் பகுதியில் 5000 எலுமிச்சம் பழம் கொண்டு துர்கா தேவியின் மணல் சிற்ப ஓவியத்தை வரைந்து இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்துள்ளார்.
2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் அணியாக ஹாட்ரிக் தோல்வி அடைந்த இலங்கை!
மேலும், அந்த ஓவியத்தில் துர்கா தேவியை ரோகித் சர்மா விழுந்து வணங்குவது போன்று காட்டியுள்ளார். பேட்டில், இந்திய அணிக்காக பிரார்த்திக்கிறேன் என்று சுட்டிக் காட்டியுள்ளார். இந்தியாவில் மணல் சிற்ப கலை பிறப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர், தனது 7 வயது முதலே மணலில் சிற்பம் வரைவதை ஆர்வமாக கொண்டுள்ளார். இதுவரையில் 100க்கும் அதிகமான மேற்பட்ட சிற்பங்களை செய்துள்ளார். மேலும், மணல் சிற்பம் மூலமாக சாதனைகள் படைத்து நிறைய பதக்கங்களையும் கைப்பற்றியுள்ளார்.
இந்த நிலையில் தான் 13ஆவது உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்ற வேண்டும் என்பதற்காக 5000 எலுமிச்சம் பழம் கொண்டு துர்கா தேவியின் ஓவியத்தை வரைந்து பிரார்த்தனை செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
