IND vs PAK: இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் போது பெண் போலீஸை தாக்க முயன்ற ரசிகருக்கு கன்னத்தில் பளார் பளார்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது பெண் போலீஸை தாக்க முயற்சித்த ரசிகரை கன்னத்தில் பளார் பளார் விட்ட போலீஸின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

A fan who tried to attack a policewoman during the India-Pakistan match received a slap on the cheek rsk

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. இதில், முதலில் விளையாடிய பாகிஸ்தான் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் ஆடிய இந்தியா, 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் போது பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் ஆட்டமிழந்து வெளியேறிய போது ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீராம் என்று ரசிகர்கள் கோஷமிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

AUS vs SL: 6 போட்டிகளில் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை – மற்ற அணிகளைப் பொறுத்து அரையிறுதி வாய்ப்பு!

பிரபல நடிகை ஊர்வதி ரவுடேலா தனது 24 கேரட் உண்மையான கோல்டு ஐபோனை தொலைத்துவிட்டதாக அகமதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், யாரேனும் கண்டுபிடித்தால் தன்னிடம் கொடுக்கும்படி மற்றவர்களின் உதவியையும் நாடி சமூக வலைதளம் மூலமாக கேட்டுக் கொண்டுள்ளார்.

2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் அணியாக ஹாட்ரிக் தோல்வி அடைந்த இலங்கை!

இந்த நிலையில் தான் பெண் போலீஸ் ஒருவரை ரசிகர் தாக்க முயற்சித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மைதானத்தில் தனது இருக்கையில் அமர்ந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் ஒருவரை கிண்டல் செய்துள்ளார். முதலில் பொறுத்துக் கொண்டிருந்த அந்த பெண் போலீஸ், அதன் பிறகு அவரை எச்சரித்துள்ளார்.

ஒரு சூறாவளி கிளம்பியதே - லக்னோவில் காற்றுக்கு விழுந்த கம்பியுடன் கூடிய பேனர் – உயிர் தப்பிய ரசிகர்கள்!

ஆனால், அதற்கும் அந்த ரசிகர் ஆக்ரோஷமாக குரல் கொடுக்கவே, பொறுமை இழந்த பெண் போலீஸ் ரசிகரின் கன்னத்தில் பளார் என்று அறைந்துள்ளார். இதற்கும், அந்த ரசிகர் பெண் போலீஸை தாக்க முயற்சித்துள்ளார். அதன் பிறகு மற்ற ரசிகர்கள் சமாதானம் செய்துள்ளனர். எனினும், இச்சம்பவம் தொடர்பாக அந்த ரசிகரை பெண் போலீஸ் அழைத்துச் செல்ல முயற்சித்துள்ளார். ஆனால், மற்ற ரசிகர்கள் அனைவரும் வேண்டாம் என்று மறுப்பு தெரித்துள்ளனர். இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Australia vs Sri Lanka: ஆடம் ஜம்பா சுழலில் சிக்கிய இலங்கை – கடைசி 32 ரன்னுக்கு 5 விக்கெட்!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios