ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 14ஆவது லீக் போட்டியில் இலங்கை அணி கடைசி 32 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து 209 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பையின் 14ஆவது லீக் போட்டி தற்போது லக்னோவில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் குசால் மெண்டிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, பதும் நிசாங்கா மற்றும் குசால் பெரேரா இருவரும் தொடக்க வீரர்களாக களமிங்கி முதல் விக்கெட்டிற்கு 125 ரன்கள் குவித்தனர்.

Australia vs Sri Lanka: ஓபனிங் நல்லா இருந்தும், பினிஷிங்கில் கோட்டைவிட்ட இலங்கை 209க்கு ஆல் அவுட்!

இதில் பதும் நிசாங்கா 61 ரன்களில் வெளியேற, குசால் பெரேரா 78 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் குசால் மெண்டிஸ் 9 ரன்களிலும், சதீரா சமரவிக்ரமா 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களது வரிசையில் தனன்ஜெயா டி சில்வா 7, துனித் வெல்லாலகே 2, சமீகா கருணாரத்னே 2, மகீஷ் தீக்‌ஷனா 0, லகிரு குமாரா 4 என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கடைசியாக சரித் அசலங்கா 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Australia vs Sri Lanka: விழுந்து விழுந்து கேட்ச் பிடித்த டேவிட் வார்னருக்கு காலில் காயம்!

இறுதியாக இலங்கை 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் குவித்தது. மழை பெய்வதற்கு முன்னதாக இலங்கை 177 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்திருந்தது. அதன் பிறகு சிறிது நேரம் மழை பெய்த நிலையில், அதன் பிறகு மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது. இதில், 32 ரன்களுக்கு 5 விக்கெட் என்று மொத்தமாக 209 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், கிளென் மேக்ஸ்வெல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

LA 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட விராட் கோலி முக்கிய காரணம் - நிக்கோலோ காம்ப்ரியானி!