AUS vs SL: 6 போட்டிகளில் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை – மற்ற அணிகளைப் பொறுத்து அரையிறுதி வாய்ப்பு!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததன் மூலமாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது.

Sri Lanka need to win 6 matches for getting Cricket World Cup Semi Finals Chance rsk

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் 14ஆவது லீக் போட்டி நேற்று லக்னோ மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் எடுத்தது. தொடகத்தில் நன்றாக விளையாடிய இலங்கை எப்படியும் 300 ரன்களுக்கு மேல் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழவே இலங்கை 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் அணியாக ஹாட்ரிக் தோல்வி அடைந்த இலங்கை!

பின்னர் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 35.2 ஓவர்களில் 215 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக ஆஸ்திரேலியா புள்ளிப்பட்டியலில் 2 தோல்வி, ஒரு வெற்றியுடன் 8ஆவது இடத்தில் உள்ளது. எனினும், நெட் ரன் ரேட்டில் -0.734 என்று மைனஸ் புள்ளிகளில் தான் இருக்கிறது.

அப்பாடா, ஒரு வழியா ஜெயிச்சிட்டோம் – நிம்மதி பெருமூச்சு விட்ட ஆஸ்திரேலியா – ஹாட்ரிக் தோல்வியில் இலங்கை!

இதே போன்று இலங்கை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 9 ஆவது இடத்தில் இருக்கிறது. இதற்கு காரணம் -1.532 என்ற நெட் ரன் ரேட் தான். விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்த இலங்கை அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு இழந்துள்ளது. எனினும், ஒரே ஒரு வாய்ப்பாக இனி விளையாடும் 6 போட்டிகளிலும் கண்டிப்பான முறையில் வெற்றி பெற வேண்டும். ஒரு போட்டியில் தோற்றால் கூட ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறும் நிலை தான் ஏற்படும்.

ஒரு சூறாவளி கிளம்பியதே - லக்னோவில் காற்றுக்கு விழுந்த கம்பியுடன் கூடிய பேனர் – உயிர் தப்பிய ரசிகர்கள்!

நெதர்லாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் மோத இருக்கிறது. இதில், நெதர்லாந்து, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் வெற்றி பெறும் வாய்ப்பு இலங்கைக்கு இருக்கிறது. இலங்கை 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் புள்ளிகள், நெட் ரன் ரேட்டைப் பொறுத்து தான் வாய்ப்பு அமையும்.

Australia vs Sri Lanka: ஆடம் ஜம்பா சுழலில் சிக்கிய இலங்கை – கடைசி 32 ரன்னுக்கு 5 விக்கெட்!

இப்படியொரு இக்கட்டான சூழலுக்கு இலங்கை அணி தள்ளப்பட்டுள்ளது. கடந்த 1996 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது. அதன் பிறகு 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பைகளில் இறுதிப் போட்டி வரை சென்று தோல்வி அடைந்து 2 ஆவது இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios