Asianet News TamilAsianet News Tamil

ஒரு சூறாவளி கிளம்பியதே - லக்னோவில் காற்றுக்கு விழுந்த கம்பியுடன் கூடிய பேனர் – உயிர் தப்பிய ரசிகர்கள்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது வீசிய சூறாவளி காற்றுக்கு மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் ரசிகர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் உயிர்தப்பிய சம்பவம் நடந்துள்ளது.

banners in Ekana Cricket Stadium Lucknow fell from the roof on crowd during AUS vs SL Match rsk
Author
First Published Oct 16, 2023, 9:29 PM IST

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பையின் 14ஆவது லீக் போட்டி தற்போது லக்னோவில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் குசால் மெண்டிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, பதும் நிசாங்கா மற்றும் குசால் பெரேரா இருவரும் தொடக்க வீரர்களாக களமிங்கி முதல் விக்கெட்டிற்கு 125 ரன்கள் குவித்தனர்.

Australia vs Sri Lanka: ஆடம் ஜம்பா சுழலில் சிக்கிய இலங்கை – கடைசி 32 ரன்னுக்கு 5 விக்கெட்!

banners in Ekana Cricket Stadium Lucknow fell from the roof on crowd during AUS vs SL Match rsk

இதில் பதும் நிசாங்கா 61 ரன்களில் வெளியேற, குசால் பெரேரா 78 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் குசால் மெண்டிஸ் 9 ரன்களிலும், சதீரா சமரவிக்ரமா 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களது வரிசையில் தனன்ஜெயா டி சில்வா 7, துனித் வெல்லாலகே 2, சமீகா கருணாரத்னே 2, மகீஷ் தீக்‌ஷனா 0, லகிரு குமாரா 4 என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கடைசியாக சரித் அசலங்கா 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Australia vs Sri Lanka: விழுந்து விழுந்து கேட்ச் பிடித்த டேவிட் வார்னருக்கு காலில் காயம்!

போட்டியின் 32.1 ஓவர்களுக்குப் பிறகு மழை குறுக்கீடு ஏற்பட்டது. அப்போது இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்திருந்தது. சிறிது நேரம் போட்டி பாதிக்கப்பட்டது. மழை நின்ற பிறகு போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. அதன் பிறகு சூறாவளி காற்று வீசத் தொடங்கியது. சிறிது நேரம் வீசிய சூறாவளிக் காற்றால் மைதானத்தில் இருந்த இரும்பு கம்பியுடன் கூடிய பேனர்கள் அப்படியே ரசிகர்கள் மீது விழுந்தது. இதில், ரசிகர்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் உயிர் தப்பிய சம்பவம் நடந்துள்ளது.

banners in Ekana Cricket Stadium Lucknow fell from the roof on crowd during AUS vs SL Match rsk

இறுதியாக இலங்கை 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், கிளென் மேக்ஸ்வெல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

LA 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட விராட் கோலி முக்கிய காரணம் - நிக்கோலோ காம்ப்ரியானி!

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios