சிக்கலில் இலங்கை அணி: வணிந்து ஹசரங்கா உள்ளிட்ட வீரர்கள் காயம்; ஆசிய கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிக்கப்பட்டுள்ளது. இதில், சுழற்பந்து வீச்சாளர் காயம் காரணமாக வணிந்து ஹசரங்கா அணியிலிருந்து விலகியுள்ளார்.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இதன் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இணைந்து 16ஆவது எடிஷனுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன.
ஏற்கனவே ஒவ்வொரு அணியும் தங்களது அணி வீரர்களை அறிவித்த நிலையில், இலங்கை அணி மட்டுமே நேற்று தங்களது அணி வீரர்களை அறிவித்துள்ளது. அதன்படி இலங்கை அணிக்கு தசுன் ஷனாகா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதில், முக்கிய பந்து வீச்சாளர்களுக்கு காயம் ஏற்பட்டது. காயம் காரணமாக லெக் ஸ்பின்னரான ஆல் ரவுண்டர் வணிந்து ஹசரங்கா, வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த் சமீரா, லஹிரு மதுஷங்கா, லஹிரு குமாரா ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.
Asia Cup 2023: மனைவியுடன் இணைந்து ஓணம் வாழ்த்து சொன்ன சஞ்சு சாம்சன்; வைரலாகும் இன்ஸ்டா பதிவு!
காயம் அடைந்த வீரர்களுக்குப் பதிலாக பினுரா ஃபெர்னாண்டோ, பிரமோத் மதுஷன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். குசல் பெரேரா 2 ஆண்டுகளுக்குப் பிறகு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும், அவருகு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், காய்ச்சல் முற்றிலும் குணமான பிறகு அணியில் இடம் பெறுவார் என்று எதிரபார்க்கப்படுகிறது. இதே போன்று மற்றொரு வீரரான அவிஷ்கா பெர்னாண்டோவும் காய்ச்சல் குணமடைந்த பிறகு அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹசரங்கா LPL 2023 இன் போது தொடையில் காயம் ஏற்பட்டு லங்கா பிரீமியர் லீக்கின் போது ஏற்பட்ட தொடை வலியில் இருந்து மறுவாழ்வு பெற்றபோது அவர்களின் வாய்ப்புகளுக்கு மிகப்பெரிய அடி ஏற்பட்டது. சமீராவுக்கு மார்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது, கடந்த வாரம் நடந்த பயிற்சி ஆட்டத்தின் போது மதுஷங்க காயம் அடைந்தார், மேலும் குமாரவுக்கு பக்கச் சோர்வு ஏற்பட்டது. இலங்கை அணிக்கு தசுன் ஷனகா கேப்டனாகவும், குசல் மெண்டிஸ் துணை கேப்டனாகவும் செயல்படுகிறார். ஹசரங்க இல்லாத நிலையில், மஹீஷ் தீக்ஷனா சுழற் பந்து வீச்சாளராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Asia Cup 2023, KL Rahul: 2 போட்டிகளில் கேஎல் ராகுல் விளையாடமாட்டார் – ராகுல் டிராவிட் ஓபன் டாக்!
இலங்கை வீரர்கள்:
தசுன் ஷனாகா (கேப்டன்), பதும் நிசாங்கா, திமுத் கருணாரத்னே, குசால் ஜனித் பெரேரா, குசால் மெண்டிஸ் (துணை கேப்டன்), சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரமா, மஹீஷ் தீக்ஷனா, துனித் வெல்லலகே, மத்தீஷா பதிரனா, கசுன் ஹேமந்த் ரஜிதா, தசுன் ஹேமந்த், பிரமோத் மதுஷன், ஃபினுரா ஃபெர்னாண்டோ