World Cup 2023: செப்டம்பர் 3ஆம் தேதி உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு: யாருக்கெல்லாம் இடம் கிடைக்கும்?
உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இந்தியா தற்போது முக்கியமான 2 தொடருக்கு தயாராகி வருகிறது. அதில் ஒன்று ஆசிய கோப்பை தொடர் நாளை 30 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதையடுத்து இந்தியா நடத்தும் உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை தொடரானது நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது.
Asia Cup 2023, KL Rahul: 2 போட்டிகளில் கேஎல் ராகுல் விளையாடமாட்டார் – ராகுல் டிராவிட் ஓபன் டாக்!
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆசிய கோப்பை தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே எல் ராகுல், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா. இவர்களுடன் இணைந்து சஞ்சு சாம்சன் ஸ்டாண்ட் பை பிளேயராக இடம் பெற்றுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் வீரர் என்பதால், திலக் வர்மாவிற்கு இந்திய அணியில் இடமா? ரோகித் சர்மா பதில்!
இந்த 17 பேர் கொண்ட இந்திய அணியிலிருந்து தான் உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை உலகக் கோப்பைக்கு தயார்படுத்தி வரும் நிலையில், டீம் இந்தியா அதற்கான வேலையில் இதுவரையில் இறங்கியதாக தெரியவில்லை. இதுவரையில் காயம் காரணமாக பிரஷித் கிருஷ்ணா, ஜஸ்ப்ரித் பும்ரா, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இடம் பெற்று பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.
40 பந்தில் 101 ரன்கள் குவித்து பேட்டை தூக்கி எறிந்து சர்ச்சையை ஏற்படுத்திய இந்திய வீரர்!
இதில், பும்ரா அயர்லாந்துக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினார். கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் காயத்திற்குப் பிறகு எந்தப் போட்டியிலும் இடம் பெறவில்லை. இதுவரையில் பயிற்சி போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கின்றனர்.
இந்த நிலையில், தான் ஆசிய கோப்பை தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதில், ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கேஎல் ராகுல் 2 போட்டிகளில் விளையாட மாட்டார். ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறுவார் என்று கூறப்படுகிறது.
Asia Cup 2023: இந்திய அணி வீரர்களை சந்தித்து பேசிய ரிஷப் பண்ட்; வைரலாகும் வீடியோ!
இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து தான் உலகக் கோப்பை 2023 தொடருக்கான இந்திய அணி வீரர்களும் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இந்தியா நடத்தும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் வரும் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக தோனி தலைமையிலான இந்திய அணி 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை கைப்பற்றியது. அதன் பிறகு இந்திய அணி ஐசிசி தொடர்களை கைப்பற்றவில்லை.
Asia Cup 2023: கேஎல் ராகுல் இல்லாமல் இலங்கை புறப்படும் ரோகித் சர்மா அண்ட் கோ!
வரும் 3ஆம் தேதி அறிவிக்கப்பட இந்திய அணியில் ரோகித் சர்மா, (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், கே எல் ராகுல், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷான் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.