40 பந்தில் 101 ரன்கள் குவித்து பேட்டை தூக்கி எறிந்து சர்ச்சையை ஏற்படுத்திய இந்திய வீரர்!

மகாராஜா கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் கருண் நாயர் அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 101 ரன்கள் குவித்த நிலையில் பேட்டை தூக்கி எறிந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

The Indian player Karun Nair who threw away his bat after scoring 107 runs in 42 balls caused controversy rsk

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தால் மகாராஜா கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கர்நாடகா பிரீமியர் லீக் எனப்படும் மகாராஜா டிராபி டி20 கிரிகெட் தொடரானது கடந்த 13 ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், குல்பர்கா மைஸ்டிக்ஸ், மைசூர் வாரியர்ஸ், ஹூப்ளி டைகர்ஸ், ஷிவமோக்கா லயன்ஸ், மங்களூரு டிராகன்ஸ் என்று மொத்தமாக 6 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.

Asia Cup 2023: இந்திய அணி வீரர்களை சந்தித்து பேசிய ரிஷப் பண்ட்; வைரலாகும் வீடியோ!

இதில், நேற்று நடந்த போட்டியில் மைசூர் வாரியர்ஸ் மற்றும் குல்பர்கா மைஸ்டிக்ஸ் அணிகள் மோதின. இதில் குல்ர்பகா அணி முதலில் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி, மைசூர் வாரியர்ஸ் அணி பேட்டிங் ஆடியது. இதில், அந்த அணியின் தொடக்க வீரர்கள் எஸ் யு கார்த்திக் 41 ரன்னிலும், சமர்த் ஆர் 80 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த, கேப்டன் கருண் நாயர் அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 9 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் உள்பட 107 ரன்கள் குவித்து கடைசி வரை ஆடட்மிழக்காமல் இருந்தார். இறுதியாக மைசூர் வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Asia Cup 2023: கேஎல் ராகுல் இல்லாமல் இலங்கை புறப்படும் ரோகித் சர்மா அண்ட் கோ!

கருண் நாயர் இந்திய அணிக்காக விளையாடிய போது முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று சதம் விளாசி சாதனை படைத்தார். ஆனால், அதன் பிறகு இந்திய அணியால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார். வரும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் கர்நாடகா அணியிலிருந்து விலகி விதர்பா அணிக்காக விளையாட இருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு எதிராக 183 ரன்கள் அடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: விராட் கோலி ஓபன் டாக்!

நேற்றைய போட்டியில் 42 பந்துகளில் 107 ரன்கள் குவித்த நிலையில், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்து விதமாக பேட்டை வீசி எறிந்தார். அதோடு, அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்பது சொல்வது போன்று செய்து காட்டினார். இது தனது மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது. எனினும், இது போன்ற செய்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடின இலக்கை துரத்திய குல்பர்கா மைஸ்டிக்ஸ் அணி 20 ஓவர்களில் 212 ரன்கள் மட்டுமே எடுத்து, 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இன்று மாலை 5.30 மணிக்கு ஹூப்ளி டைகர்ஸ் மற்றும் மைசூர் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடக்கிறது.

Virat Kohli New Hairstyle: ஆசிய கோப்பைக்கு முன்னதாக புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறிய விராட் கோலி!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios