Virat Kohli New Hairstyle: ஆசிய கோப்பைக்கு முன்னதாக புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறிய விராட் கோலி!
ஆசிய கோப்பைக்கு முன்னதாக விராட் கோலி புதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக இந்திய வீரர்கள் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதோடு, யோ யோ டெஸ்ட் பரிசோதனையும் செய்து கொண்டனர்.
Asia Cup 2023: ஆசிய கோப்பை யாருக்கு? பாகிஸ்தான் கைப்பற்றுமா? வாசீம் அக்ரம் கணிப்பு!
இதில், தனது ஸ்கோரானது 17.2 என்று வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று விராட் கோலி கூறியிருந்தார். இதற்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஏனென்றால், பிசிசிஐ வைத்துள்ள குறைந்தபட்ச ஸ்கோரே 16.5 மட்டுமே. அப்படியிருக்கும் போது விராட் கோலி 17.2 என்று குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க, விராட் கோலி தனது ஃபிட்னெஸிற்கு அதிகளவில் முக்கியத்தும் கொடுப்பார். அதற்கேற்பவும் உடை அணிவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். பல விளையாட்டு தொடர்பான நிறுவனங்களுக்கு விளம்பர தூதராகவும் இருந்து வருகிறார். உலகில் பணக்கார கிரிக்கெட்டர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.
கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ரெட் கார்டு; பொல்லார்டு கோபம்; சுனில் நரைன் வெளியேற்றம்!
ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள் எப்படி இருக்கிறார்களோ அவர்களைப் போன்று உடை அணிவதையும், ஹேர் ஸ்டைல் மற்றும் தாடி வைத்துக் கொள்ளவும் விரும்புகின்றனர். இந்த நிலையில், ஆசிய கோப்பைக்கு முன்னதாக விராட் கோலி புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், ஹேர் ஸ்டைலிஸ்ட் அல்ஃபகத் அஹ்மத் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தோனி போன்று ஹேர் ஸ்டைல் வைத்துக் கொண்ட இஷான் கிஷான் புகைப்படம் வெளியானது.