விராட் கோலி, ரோகித் சர்மா மான்கட் முறையில் ஆட்டமிழந்தால் என்ன நடக்கும்? ரவிச்சந்திரன் அஸ்வின் ஓபன் டாக்!
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் மான்கட் முறையில் ரன் அவுட் செய்யப்பட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
மான்கட் முறைக்கு பெயர் போனவர் ரவிச்சந்திரன் அஸ்வின். எத்தனையோ வீரர்களுக்கு தனது மான்கட் முறை மூலமாக பயத்தை காட்டியிருக்கிறார். அப்படி ஒரு சம்பவம் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு நடந்தால் என்ன ஆகும் என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
46 பந்துகளில் சதம் அடித்திருக்கிறேன்; இன்னும் குறைந்த பந்துகளில் சதம் அடிக்க வேண்டும் – ஜோஸ் பட்லர்!
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இப்படி ஒரு ரன் அவுட்டை செய்யும் பந்து வீச்சாளரை பலரும் விமர்சனம் செய்வார்கள். இதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று ரசிகர்களும் குரல் கொடுப்பார்கள். இதற்கு ஒரேயொரு தீர்வு இருக்கிறது. அது என்னவென்றால், பந்து வீச்சாளர் பந்து வீசுவதற்கு முன்பாக பேட்ஸ்மேன் வெளியில் செல்லாமல் இருப்பது மட்டுமே. அப்படி பேட்ஸ்மேன் க்ரீஸ் கோட்டிற்கு வெளியில் செல்லாமல் இருந்தால் பந்துவீச்சாளர் அவ்வாறு செய்யமாட்டார்.
Shreyas Iyer: முதுகு வலி காயம் குறித்து வெளிப்படையாக பேசிய ஷ்ரேயாஸ் ஐயர்!
இந்த நேரத்தில் யாரும் இப்படியொரு ரன் அவுட்டை எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால், உலகக் கோப்பை போன்று ஒரு பெரிய தொடர் நடக்கும் போது, இது போன் ரன் அவுட் செய்வதற்கு ஒவ்வொரு பந்து வீச்சாளரும் தயாராகத் தான் இருப்பார்கள். ஐபிஎல் தொடரில் கூட இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது. உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பது ஒவ்வொருவரதும் கனவ்வு தான். அப்படியிருக்கும் போது இந்த மான்கட் ரன் அவுட்டை செய்ய மாட்டோம் என்று சொல்வது தவறு. ஆகையால், என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறதோ அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
பாபர் அசாமை தாண்டி விராட் கோலியால் ஒன்னும் செய்ய முடியாது: டாம் மூடி!
உலகக் கோப்பை 2023 தொடரானது வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் இந்தியாவில் நடக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது அக்டோபர் 14 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.