உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள்.. ஈட்டி எரிதலில் மீண்டும் ஒரு சாதனை - தங்கம் வென்றார் இந்தியர் நீரஜ் சோப்ரா!
தற்பொழுது ஹங்கேரி நாட்டின் தலைநகரமான புடபெஸ்ட் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டிகளின் இறுதிச்சுற்றில் ஈட்டி எறிதல் பிரிவில் நடந்த போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா.
ஹங்கேரி நாட்டில் தற்பொழுது நடைபெற்று வரும் இந்த உலக தடைகளை சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான தகுதி போட்டிகளில், முதல் முயற்சியிலேயே 88.77 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடந்து முடிந்த இறுதிச்சுற்று ஈட்டி எறிதல் போட்டிகளில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து அவர் சாதனை படைத்தார். நீரஜ் சோப்ரா இந்த போட்டியில் முதலிடத்தை பிடித்த நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த ஹர்ஷத் என்ற வீரர் 87.82 மீட்டர் ஈட்டி எரிந்து இரண்டாவது இடத்தையும், செக் குடியரசை சேர்ந்த யாகூப் என்கின்ற வீரர் 86.67 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.
உலக தடகள சாம்பியன்ஷிப்: வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
இது மட்டுமல்லாமல் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டாவது முறையாக தங்கப்பதக்கம் வெல்லும் இந்திய வீரர் என்கின்ற பெருமையை நம் இந்திய நாட்டிற்கு தேடித் தந்துள்ளார் நீரஜ் சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக கடந்த 2003 ஆம் ஆண்டு நீளம் தாண்டும் போட்டியில் பங்கேற்ற அஞ்சு பார்பி ஜார்ஜ் இந்தியாவிற்கு ஒரு வெண்கல பதக்கத்தை வென்று கொடுத்தார். அதன் பிறகு சுமார் 19 ஆண்டுகள் கழித்து உலக அரங்கில் இந்தியாவிற்கு இந்த மாபெரும் கிடைத்துள்ளது. மேலும் ஒலிம்பிக் உலக தடகள சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
மாவட்ட அளவிலான பெண்கள் கபாடி போட்டி - சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய தூத்துக்குடி அணி