Shreyas Iyer: முதுகு வலி காயம் குறித்து வெளிப்படையாக பேசிய ஷ்ரேயாஸ் ஐயர்!
தனது காயம் பற்றியும், மீண்டும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்தும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.
இந்திய அணியில் கடந்த 2017 ஆம் ஆண்டு இடம் பெற்று விளையாடி வருபவர் ஷ்ரேயாஸ் ஐயர். 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 624 ரன்களும், 32 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1593 ரன்களும், 47 டி20 போட்டிகளில் விளையாடி 1043 ரன்களும் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 113 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இந்த நிலையில், முதுகு வலி காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் போது முதுகு வலி அதிகமான நிலையில் போட்டியில் பேட்டிங் ஆட கூட வரவில்லை. இதையடுத்து நடந்த ஐபிஎல் 2023, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் என்று எந்த தொடரிலும் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறவில்லை.
பாபர் அசாமை தாண்டி விராட் கோலியால் ஒன்னும் செய்ய முடியாது: டாம் மூடி!
இந்த நிலையில் தான் வரும் 30 ஆம் தேதி தொடங்க உள்ள 16ஆவது சீசனுக்கான ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடந்த பயிற்சி போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 199 ரன்கள் எடுத்தார். அதோடு, 50 ஓவர்கள் வரையிலும் பீல்டிங்கும் செய்துள்ளார்.
இந்த நிலையில் பிசிசிஐ டிவிக்கு அளித்த பேட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியிருப்பதாவது: எனது காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளாமல் சில போட்டிகளில் நான் விளையாடி வந்தேன். நான் வலியானது எனது கால் விரல்கள் வரையில் இருந்தது. ஒரு கட்டத்தில் என்னால் காயத்தோடு போராட முடியவில்லை. ஆதனால், நான் அறுவை சிகிச்சை செய்து கொள்ள தயாராக இருந்தேன். அதன் பிறகு தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.
உலக தடகள சாம்பியன்ஷிப்: வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
நீண்ட நாள் பயிற்சிக்குப் பிறகு இந்திய அணியுடன் இணைந்து கொண்டேன். இது எனக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இவ்வளவு சீக்கிரமாக காயத்திலிருந்து குணமடைந்து வருவேன் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். ஆசிய கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து உலகக் கோப்பைக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆதலால் ஆசிய கோப்பை தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
MS Dhoni Video: தனது காலில் விழும் ரசிகையை தடுத்து நிறுத்தி கை கொடுத்த தோனி; வைரலாகும் வீடியோ!