தனது காலில் விழுந்த பெண் ரசிகையை தடுத்து நிறுத்தி அவருக்கு கை கொடுத்த தோனியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தோனி ஐபிஎல் தொடர்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அப்படி, அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக ஐபிஎல் டிராபியை கைப்பற்றியது. இதையடுத்து வரும் 2024 ஆம் ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் தொடருக்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். இது தொடர்பான ஜிம் ஒர்க் அவுட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

உலக தடகள சாம்பியன்ஷிப்: வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

இது தவிர தனது ஓய்வு நேரத்தில் தோனி காரில் வலம் வருவதும், பைக்கில் வலம் வருவதுமாக இருக்கிறார். இந்த நிலையில், தான் தோனியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில்வைரலாகி வருகிறது. அதில், தோனி, தனது காலில் விழும் பெண் ரசிகையை தடுத்து நிறுத்தி அவருக்கு கை கொடுத்து அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். மற்றொரு வீடியோ ஒன்றில் தோனி அமெரிக்கா செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

நீங்கள் எப்படி இந்தியாவை ஜெயிக்க முடியும்? பாகிஸ்தானை பங்கமாய் கலாய்த்த கம்ரான் அக்மல்!

Scroll to load tweet…

Scroll to load tweet…