46 பந்துகளில் சதம் அடித்திருக்கிறேன்; இன்னும் குறைந்த பந்துகளில் சதம் அடிக்க வேண்டும் – ஜோஸ் பட்லர்!
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 30 பந்துகளில் சதம் அடிக்க வேண்டும் என்று தான் நினைப்பதாக இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.
மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படுபவர் தென் ஆப்பிரிக்காவின் அதிரடி வீரர் ஏபி டிவிலியர்ஸ். விராட் கோலியின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். மைதானத்தை சுற்றிலும் எங்கு வேண்டுமானாலும் எந்த பந்தயும் அடிக்க முடியும். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜோகினஸ்பர்க்கில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டிவிலியர்ஸ் 30 பந்துகளில் சதம் அடித்து கோரி ஆண்டர்சனின் 36 பந்துகளில் சதம் அடித்த சாதனையை முறியடித்தார்.
Shreyas Iyer: முதுகு வலி காயம் குறித்து வெளிப்படையாக பேசிய ஷ்ரேயாஸ் ஐயர்!
ஏபி டிவிலியர்ஸ் இந்த சாதனையை இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரால் முறியடிக்க முடியும். முன்வரிசை வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தால் பின்வரிசையில் களமிறங்கக் கூடிய வீரர்களால் இந்த சாதனையை நிகழ்த்த முடியும் என்றால், அது ஜோஸ் பட்லரால் முடியும்.
இது குறித்து பேசிய ஜோஸ் பட்லர் கூறியிருப்பதாவது: ஆம், என்னால் அது கண்டிப்பாக முடியும். ஒரு நாள் போட்டிகளில் 46 பந்துகளில் சதம் அடித்திருக்கிறேன். இதிலிருந்து 16 பந்துகள் குறைக்க வேண்டும். இதுவரையில் ஏபி டிவிலியர்ஸ் சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. நான் விளையாடிய போட்டிகளில் டி20 உலகக் கோப்பையில் சார்ஜாவில் இலங்கைக்கு எதிராக அடித்த சதம் மிகவும் முக்கியம்.
பாபர் அசாமை தாண்டி விராட் கோலியால் ஒன்னும் செய்ய முடியாது: டாம் மூடி!
ஐபிஎல் தொடரில் வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நான் ஆட்டமிழக்காமல் விளையாடி 94 ரன்கள் எடுத்தேன். கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். இதில், 49 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகள் உள்பட 80 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தேன். இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது என்று கூறியுள்ளார்.