கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ரெட் கார்டு; பொல்லார்டு கோபம்; சுனில் நரைன் வெளியேற்றம்!
கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் சுனில் நரைனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் கரீபியல் பிரீமியர் லீக் டி20 தொடர் நடந்து வருகிறது. கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரானது வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. இந்த கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டியில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
World Cup 2023: அக்டோபர் 4ல் உலகக் கோப்பை 2023 தொடக்க விழா; கேப்டன்ஸ் டே!
அதன்படி, குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்கள் வீசப்படவில்லை என்றால், 18ஆவது ஓவரின் போது வெளிவட்டத்தில் 4 பீல்டர்கள் மட்டுமே நிற்க முடியும். அதாவது, 18வது ஓவருக்குள் நுழையும் பொழுது மெதுவாக பந்து வீசி இருந்தால், அந்த ஓவரின் போது வெளிவட்டத்தில் 4 பீல்டர்கள் மட்டுமே நிற்க முடியும். இதே 19 ஆவது ஓவர் என்றால், வெளிவட்டத்தில் மூன்று பீல்டர்கள் மட்டுமே நிற்க முடியும்.
இதுவே 20 ஓவரில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை என்றால், வெளிவட்டத்தில் 3 பீல்டர்கள் மட்டுமே இருப்பார்கள். ஆனால் அணியிலிருந்து ஒரு வீரருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியில் அனுப்பப்படுவார். இதன் மூலமாக 10 பேரை மட்டுமே வைத்து விளையாட முடியும்.
46 பந்துகளில் சதம் அடித்திருக்கிறேன்; இன்னும் குறைந்த பந்துகளில் சதம் அடிக்க வேண்டும் – ஜோஸ் பட்லர்!
கால்பந்துபோட்டிக்கு மட்டுமே ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான், கரீபியன் பிரீமியர் லீக் தொடர் எனப்படும் வெஸ்ட் இண்டீஸில் நடக்கும் இந்த தொடர் மூலமாக கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ரெட் கார்டு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரெட் கார்ட் முறையானது நேற்றைய போட்டியின் போது சுனில் நரைனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
நேற்று, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. இதில், டிரின்பாகோ அணியின் கேப்டனாக கெரான் பொல்லார்டு செயல்பட்டார். நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் கேப்டனாக ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் செயல்பட்டார்.
பாபர் அசாமை தாண்டி விராட் கோலியால் ஒன்னும் செய்ய முடியாது: டாம் மூடி!
இந்தப் போட்டியில் டாஸ் வென்று பொல்லார்டு முதலில் பந்து வீசினார். அதன்படி, நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், ஆடிய டிரின்பாகோ அணி 17.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் போது, டிரின்பாகோ அணிக்கு முதல் முறையாக ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. அதாவது, டிரின்பாகோ அணியின் சுனில் நரைனுக்கு தான் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. ஆம், அவரை பொல்லார்டு வெளியேற்றினார். முதலில் பந்து வீசிய டிரின்பாகோ அணி 20ஆவது ஓவரில் மெதுவாக பந்து வீசியது தெரியவந்தது. இதையடுத்து ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. அப்பொழுது கேப்டன் கெரான் பொல்லார்டு யாரையாவது வெளியேற்ற வேண்டி இருந்தது. இதன் காரணமாக அவர் சுனில் நரைனை வெளியேற்றினார்.
போட்டி முடிந்த பிறகு பேசிய கெரான் பொல்லார்டு கூறியிருப்பதாவது: உண்மையில் ஒவ்வொருவரது கடின உழைப்பையும் இது வீணடிக்கும் விதி தான். எங்களால் முடிந்த வரையில் சிறப்பாகவும் வேகமாகவும் விளையாட போகிறோம். அப்படியிருக்கும் போது ஒரு போட்டியில் 30 முதல் 45 நொடிகளுக்காக தண்டிக்கப்படுவீர்கள் என்றால், இது தவறான ஒன்று தான் என்று கூறியுள்ளார்.