Asianet News TamilAsianet News Tamil

Asia Cup 2023: கேஎல் ராகுல் இல்லாமல் இலங்கை புறப்படும் ரோகித் சர்மா அண்ட் கோ!

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பை தொடருக்காக இன்று இலங்கைக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.

Rohit Sharma and Co depart Sri Lanka without KL Rahul for Asia Cup 2023 rsk
Author
First Published Aug 29, 2023, 10:20 AM IST

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்துக்கு எதிரான தொடரை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட கையோடு இந்திய அணி வீரர்கள் ஆசிய கோப்பை 2023 தொடருக்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஒன்று கூடினர். அங்கு வீரர்களுக்கு யோ யோ டெஸ்ட் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், பயிற்சி போட்டியும் நடத்தப்பட்டது.

பாகிஸ்தானுக்கு எதிராக 183 ரன்கள் அடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: விராட் கோலி ஓபன் டாக்!

இதில், யார் யாருக்கு எந்த இடம் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு, போட்டி நடக்கும் போது வீரர்களின் வரிசையில் மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரானது 30ஆம் தேதி நாளை முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கிறது.

முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதுகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது செப்டம்பர் 2 ஆம் தேதி இலங்கையில் நடக்கிறது. இந்த நிலையில், ரோகித் சர்மா தலமையிலான இந்திய வீரர்கள் இன்று இலங்கைக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.

Virat Kohli New Hairstyle: ஆசிய கோப்பைக்கு முன்னதாக புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறிய விராட் கோலி!

ஆனால், கேஎல் ராகுல் மட்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னதாக இலங்கைக்கு புறப்பட்டு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. பெங்களூருவில், கேஎல் ராகுல் மீது மட்டும் முழு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அவருக்கு என்று அதிக நேரம் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ தேர்வுத் தலைவர் அஜித் அகர்கர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கேஎல் ராகுல் இடம் பெற மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக இஷான் கிஷான் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்றும் கூறியுள்ளார். பேக்கப் பிளேயராக சஞ்சு சாம்சன் இலங்கைக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளார். ஆனால், கேஎல் ராகுல் மட்டும் நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று அவர் கூறியுள்ளார்.

Asia Cup 2023: ஆசிய கோப்பை யாருக்கு? பாகிஸ்தான் கைப்பற்றுமா? வாசீம் அக்ரம் கணிப்பு!

Follow Us:
Download App:
  • android
  • ios