Asia Cup 2023, KL Rahul: 2 போட்டிகளில் கேஎல் ராகுல் விளையாடமாட்டார் – ராகுல் டிராவிட் ஓபன் டாக்!
ஆசிய கோப்பை 2023 தொடரில் முதல் 2 போட்டிகளில் கேஎல் ராகுல் விளையாடமாட்டார் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து தொடரை முடித்துவிட்டு தற்போது ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகிவிட்டது. இதுவரையில் இந்திய அணி 7 ஆசிய கோப்பைகளை வென்றுள்ளது. இந்த நிலையில், 16ஆவது எடிஷனுக்கான ஆசிய கோப்பை தொடரானது பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நாளை முதல் தொடங்குகிறது. இந்த ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 17ஆம் தேதி வரையில் நடக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் வீரர் என்பதால், திலக் வர்மாவிற்கு இந்திய அணியில் இடமா? ரோகித் சர்மா பதில்!
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாள், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் என்று 6 அணிகள் இந்த ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற்று விளையாடுகின்றன. நாளை தொடங்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதுகின்றன.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து தொடரை முடிந்த இந்திய அணி வீரர்கள் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தனர். அதோடு, யோ யோ என்று சொல்லப்படும் உடல் தகுதியை நிரூபிக்கும் பரிசோதனையும் செய்து கொண்டுள்ளனர். இதில், கேஎல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெறவில்லை.
40 பந்தில் 101 ரன்கள் குவித்து பேட்டை தூக்கி எறிந்து சர்ச்சையை ஏற்படுத்திய இந்திய வீரர்!
ஐபிஎல் தொடரின் போது தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட நீண்ட ஓய்விற்குப் பிறகு அகாடமியில் இடம் பெற்று தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தார். அதோடு, ஆசிய கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம் பெற்று தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் ஆசிய கோப்பை தொடருக்கான இன்று இலங்கைக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். அதில், கேஎல் ராகுல் இடம் பெறப்போவதில்லை. மாறாக, முதல் 2 போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். முதல் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்குகிறது.
Asia Cup 2023: இந்திய அணி வீரர்களை சந்தித்து பேசிய ரிஷப் பண்ட்; வைரலாகும் வீடியோ!
இந்தியா தனது 2ஆவது போட்டியில் நேபாள் அணியை எதிர்கொள்கிறது. இந்த 2 போட்டிகளிலும் கேஎல் ராகுல் விளையாடமாடடார் என்று கூறியுள்ளார். ஆனால், அதற்கு முன்னதாக தேர்வுக் குழு தலைவரான அஜித் அகர்கர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விளையாடமாட்டார் என்று கூறியிருந்தார். அதோடு, அவருக்குப் பதிலாக இஷான் கிஷான் இடம் பெறுவார் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Asia Cup 2023: கேஎல் ராகுல் இல்லாமல் இலங்கை புறப்படும் ரோகித் சர்மா அண்ட் கோ!