IND vs PAK போட்டிக்கு 10 வினாடிக்கு ரூ.30 லட்சம், ஆசிய கோப்பைக்கு ரூ.400 கோடி, வருமானம் ஈட்டும் டிஸ்னி ஸ்டார்!
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் மூலமாக டிஸ்னி ஸ்டார் நிறுவனம் விளம்பரம் மூலமாக ரூ.400 கோடி வரையில் வருமானம் ஈட்ட உள்ளது.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 16ஆவது எடிஷன் நாளை 30 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் நடத்தும் ஆசிய கோப்பை தொடரானது வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் நடக்கிறது. 31 ஆம் தேதி நடக்கும் போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
Asia Cup 2023: மனைவியுடன் இணைந்து ஓணம் வாழ்த்து சொன்ன சஞ்சு சாம்சன்; வைரலாகும் இன்ஸ்டா பதிவு!
இந்த நிலையில், அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியின் போது ஒளிபரப்பு செய்யப்படும் 10 வினாடி விளம்பரத்தின் மூலமாக டிஸ்னி ஸ்டார் நிறுவனம் ரூ.30 லட்சம் வரையிலும் வருமானம் ஈட்ட உள்ளது.
அதே போன்று இந்த ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் மூலமாக டிஸ்னி ஸ்டார் நிறுவனம் ரூ.400 கோடி வரையில் வருமானம் ஈட்ட உள்ளது. டிவி (ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்) மற்றும் டிஜிட்டல் (டிஸ்னி+ஹாட்ஸ்டார்) ஆகிய இரண்டிலும் வரவிருக்கும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிக்கான 17 ஸ்பான்சர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விளம்பரதாரர்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
Asia Cup 2023, KL Rahul: 2 போட்டிகளில் கேஎல் ராகுல் விளையாடமாட்டார் – ராகுல் டிராவிட் ஓபன் டாக்!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் இல்லாமல் மற்ற அணிகளின் போட்டியின் போது ஒளிபரப்பு செய்யப்படும் 10 வினாடி விளம்பரத்தின் மூலமாக ரூ. 2 முதல் ரூ. 3 லட்சம் வரையில் வருமானம் ஈட்டுகிறது. டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் IND vs PAK லைவ் ஸ்ட்ரீமிங்கிற்கு இலவசமாக அமைக்கப்பட்டுள்ளதால், ஒளிபரப்பாளர் அதிக பார்வையாளர்களை எதிர்பார்க்கிறார். மொபைல் சாதனங்களுக்கு மட்டும், டிஸ்னி-ஸ்டார் ஆயிரம் இம்ப்ரெஷன்களுக்கு ரூ.70-80 வசூலிக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் வீரர் என்பதால், திலக் வர்மாவிற்கு இந்திய அணியில் இடமா? ரோகித் சர்மா பதில்!
டிஸ்னி-ஸ்டார் விளம்பர விற்பனைத் தலைவர் அஜித் வர்கீஸ், அடுத்த சில மாதங்களில் பண்டிகை விளம்பரத்தில் அதிக பங்களிப்பை உறுதி செய்வதே தங்களது திட்டமாக உள்ளது என்றார். மேலும், "டிஜிட்டலில் விளம்பரதாரர்களுக்கான எங்கள் திட்டம் தனிப்பயனாக்கப்படும் மற்றும் ஈர்க்கக்கூடியதாக இருக்கும். நாங்கள் கவர்ச்சிகரமான விலை மற்றும் பரந்த அளவிலான இலக்கு விருப்பங்களை வழங்குவோம். அடுத்த சில மாதங்களில் பண்டிகைச் செலவில் மூன்றில் இரண்டு பங்கு அல்லது 80% கூட எங்களுக்குப் பெரும் பங்கைப் பெற்றுத் தரும்,” என்று அவர் கூறியிருந்தார்.
40 பந்தில் 101 ரன்கள் குவித்து பேட்டை தூக்கி எறிந்து சர்ச்சையை ஏற்படுத்திய இந்திய வீரர்!
ஆசிய கோப்பை 2023 ஸ்பான்சர்கள்:
தம்ஸ் அப் (கோகோ கோலா), அமுல், டியோடரண்ட் தயாரிப்பாளர் மெக்கென்ரோ, நெரோலாக் பெயிண்ட், பெர்கர் பெயிண்ட்ஸ், ஜிண்டால் பாந்தர், சாம்சங் மொபைல்கள், எம்ஆர்எஃப் டயர்கள், மாருதி சுஸுகி, அமேசான் பே, மை11 சர்க்கிள், ஐசிஐபிசிஐ பிஆர்யு பரஸ்பர நிதி, பாலிசிபிஜார்.