லங்கா பிரீமியர் லீக்: மைதானத்திற்கு வந்த 6 அடி நீளமுள்ள பாம்பை வெளியேற்றிய நடுவர்கள்!
லங்கா பிரீமியர் தொடரில் ஜஃப்னா மற்றும் டம்புல்லா அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, திடீரென மைதானத்திற்குள் பாம்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐபிஎல் தொடர் போன்று பி.எஸ்.எல்., பிபிஎல், எஸ்.ஏ20, டி20 பிளாஸ்ட் என்று டி20 போட்டி தொடர்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதே போன்று தான் இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் எனப்படும் எல்பிஎல் 2023 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதில், 4ஆவது சீசனுக்கான லீக் தொடர் கடந்த 30 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடர் வரும் 20 ஆம் தேதி வரையில் நடக்கிறது.
Eng vs Aus 5th Test: போராடி தோற்ற ஆஸ்திரேலியா: தொடரை 2-2 என்று சமன் செய்த இங்கிலாந்து!
இந்த லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஜஃப்னா கிங்ஸ், கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ், காலே டைட்டன்ஸ், டம்புல்லா ஆரா, பி லவ் கண்டி என்று 5 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. இதன் முதல் போட்டியில் கொழும்பு - ஜஃப்னா அணிகள் விளையாடின. இதில் ஜஃப்னா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
இரண்டாவது டி20 போட்டி நேற்று நடந்தது. இதில், காலே டைட்டன்ஸ் மற்றும் டம்புல்லா ஆரா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டம்புல்லா அணி கேப்டன் குசால் மெண்டிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த காலே அணியில், ராஜபக்சா மற்றும் கேப்டன் ஷனகா இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்க்க காலே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 180 ரன்கள் எடுத்தது. இதில், ஷெவோன் டேனியல் 33 ரன்களும், ராஜபக்சே 48 ரன்களும், ஷனாகா 42 ரன்களும் எடுத்தனர்.
தோனியின் முதலீட்டு நிறுவனங்கள்: ட்ரோன், கதாபுக், 7 இங்க் ப்ரீவ்ஸ், ஸ்போர்ட்ஸ்ஃபிட்!
இதையடுத்து களமிறங்கிய டம்புல்லா அணியில் தனஜ்செயா டி சில்வா 43 ரன்களும், குசால் பெரேரா 40 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியெறினர். இறுதியாக அலெக்ஸ் ராஸ் அதிரடியாக ஆடவே டம்புல்லா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 180 ரன்கள் எடுக்க போட்டி டை ஆனது. அதன் பிறகு சூப்பர் ஓவர் நடந்தது. இதில், டம்புல்லா ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய காலே அணி 11 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் டம்புல்லா பேட்டிங் ஆடிய போது 4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில், காலே வீரர் ஷகிப் அல் ஹசன் பந்து வீச வந்தார். அப்போது மைதானத்திற்கு எதிர்பாராத விதமாக சுமார் 6 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த வீரர்கள் போட்டியை சிறிது நேரம் நிறுத்தினர். அதன் பிறகு வந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் நடுவர்கள் இணைந்து மைதானத்திலிருந்தே பாம்பை வெளியேற்றினர். அப்போது அப்போ பின்னாடியே சென்ற நடுவரது புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது ஒரு புறம் இருக்க இந்திய கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான தினேஷ் கார்த்திக் நாகினி திரும்ப வந்துவிட்டதாக விமர்சனம் செய்துள்ளார். ஆம், வங்கதேச வீரர்களின் பேவரைட்டான நாகினி டான்ஸ் குறித்து அவர் விமர்சித்துள்ளார்.