உலகக் கோப்பையில் யாருக்கு வாய்ப்பு? சூர்யகுமார் யாதவ் அல்லது சஞ்சு சாம்சன் – தீர்மானிக்கும் 3ஆவது ODI!
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டி நாளை டிரினிடாட்டில் தொடங்கும் நிலையில், இதில் தனது திறமையை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு மட்டுமே உலகக் கோப்பை 2023 தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்ய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் வெஸ்ட் இண்டீஸில் முகாமிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்கான தேர்வில் குழப்பம் நீடிக்கிறது என்பதை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இது குறித்து கூட முன்னாள் வீர்ரகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அணியில் இருக்கும் வீரர்களின் மிக முக்கியமாக சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரை தேர்வு செய்வதில் அதிக குழப்பம் நீடிக்கிறது. இருவரும் இன்னும் ஒரு நாள் போட்டிகளில் தங்களை நிரூபிக்கவில்லை. ஏற்கனவே காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்களது உடல் தகுதி திறமையை வெளிப்படுத்தி வரும் கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 3ஆவது மற்றும் 4ஆவது இடங்களுக்கு அவர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கின்றனர்.
ஓவர் நைட்டுல ஹீரோவான நிக்கோலஸ் பூரன் – 9 ஆவது முறையாக சாம்பியனான MI!
ஆனால், அவர்கள் அணியில் இல்லாத நிலையில், அடுத்தகட்டமாக இந்திய அணி நிர்வாகத்தின் பார்வையானது சூர்யகுமார் யாதவ் மீது திரும்பியுள்ளது. டி20 போட்டிகளில் சிறப்பு வாய்ந்த வீரரான சூர்யகுமார் யாதவ் ஒரு நாள் போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்த தவறி வருகிறார். கடந்த ஒரு வருடத்தில் ஒரு நாள் போட்டிகளில் அவரது பேட்டிங் ஆவரேஜ் வெறும் 13.60 மட்டுமே. அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகளில் மூன்றிலும் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார்.
ஐபிஎல்லில் இல்லையென்றால் என்ன, மேஜர் லீக் கிரிக்கெட்டில் சாம்பியனான MI நியூயார்க்!
இதுவே சஞ்சு சாம்சனி ஆவரேஜ் ஆனது 73.66ஆக உள்ளது. சூர்யகுமார் யாதவ் ஒரு நல்ல வீரர், அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரது செயல்திறன் அதை வெளிப்படுத்தியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, டி20களில் அவர் அமைத்துள்ள உயர் தரத்துக்கு ஏற்ப அவரது ஒருநாள் போட்டி இல்லை என்பதை ஒப்புக்கொண்ட முதல் நபராகவும் அவர் இருப்பார் என்று நினைக்கிறேன். ஒரு நாள் கிரிக்கெட்டையும் கற்று வருகிறார். எங்களால் முடிந்தவரை அவருக்கு வாய்ப்புகளை வழங்க விரும்புகிறோம், பின்னர் அந்த வாய்ப்புகளை அவர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்று 2ஆவது ஒருநாள் போட்டிக்குப் பிறகு டிராவிட் கூறினார்.
மும்பை அணிக்கு எதிராக பந்து வீசி விக்கெட் கைப்பற்றிய ஜஸ்ப்ரித் பும்ரா!
சாம்சன் தனது பங்கிற்கு 2வது ஒருநாள் போட்டியில் கிடைத்த அரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்த முடியவில்லை. கடைசி ஒருநாள் போட்டிக்கு அவர் பிளேயிங் லெவன் அணியில் இடம் பெறுவாரா என்பதை யாராலயும் கணிக்க முடியாது. எனினும், வாய்ப்பு கொடுத்தால், அவர் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தான் அவருக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு. அதன்பிறகு அவர் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புகள் மிக மிக குறைவு.