Asianet News TamilAsianet News Tamil

கேப்டனாக திரும்ப வந்த ஜஸ்ப்ரித் பும்ரா; ருதுராஜ் துணை கேப்டன்: அயர்லாந்துக்கு எதிரான டி20 அணி அறிவிப்பு!

அயர்லாந்துக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Jasprit Bumrah return as a captain from Ireland T20 Series; and India T20 Squad announced now
Author
First Published Jul 31, 2023, 8:53 PM IST

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து தற்போது 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் உள்ள நிலையில், 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை டிரினிடாட்டில் நடக்கிறது. இதையடுத்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

தோனியின் முதலீட்டு நிறுவனங்கள்: ட்ரோன், கதாபுக், 7 இங்க் ப்ரீவ்ஸ், ஸ்போர்ட்ஸ்ஃபிட்!

வெஸ்ட் இண்டீஸ் தொடரைத் தொடர்ந்து இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்கிறது. அங்கு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதுவரையில் இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்படாமல் இருந்தது.

அவ்னி மற்றும் கிரிஷிவ்.. இந்தியாவை பெருமைப்படுத்திய குட்டி வீரர்கள் - ஒளிரும் இந்திய ஒலிம்பிக்கின் எதிர்காலம்!

இந்த நிலையில், அயர்லாந்துக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இதுவரையில் காயம் காரணமாக அறுவை செய்து பெங்களூருவில் உடல் தகுதி பெற்று வந்த ஜஸ்ப்ரித் பும்ரா இடம் பெற்றுள்ளார். அதோடு அவர் தான் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பையில் யாருக்கு வாய்ப்பு? சூர்யகுமார் யாதவ் அல்லது சஞ்சு சாம்சன் – தீர்மானிக்கும் 3ஆவது ODI!

ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் தவிர, யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னாய், ஷாபாஸ் அகமது, வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான் ஆகியோர் பலர் இடம் பெற்றுள்ளனர்.

டி20 தொடருக்கான இந்திய அணி:

ஜஸ்ப்ரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னாய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான்.

இதில் கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம் பெறவில்லை. பிரசித் கிருஷ்ணா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா இருவரும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கயாக், பெயிண்ட்பால் என்று ஜாலியா இருக்கும் கேஎல் ராகுல்: வைரலாகும் வீடியோ!

Follow Us:
Download App:
  • android
  • ios