பிசிசிஐ வெளியிட்ட ஷாக்கிங் நியூஸ்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா கிடையாதா?
வரும் ஜூன் 7ஆம் தேதி நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்ற அதிர்ச்சி தகவல் போலியான பிசிசிஐயின் டுவிட்டர் பக்கத்திலிருந்து வெளியிட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்தப் போட்டியில் கண்டிப்பாக இந்தியா ஜெயிக்க வேண்டும். ஒரு வேளை இந்தப் போட்டி டிராவில் முடிந்தாலோ அல்லது இந்தியா தோல்வியை தழுவினாலோ இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை இழக்க வேண்டும் என்று இருந்தது.
அதன்படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. கடந்த 9 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 571 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 91 ரன்கள் முன்னிலை பெற்றது. இதில், ஷும்பன் கில் 128 ரன்களும், விராட் கோலி 186 ரன்களும் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 2 ஆவது இன்னிங்ஸில் டிராவிஸ் ஹெட் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். மார்னஸ் லபுஷேன் மற்றும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் நின்னு விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் லபுஷேன் அரைசதம் அடித்தார். இந்தப் போட்டியில் யாரலயும் வெற்றி பெற முடியாது. கண்டிப்பாக போட்டி டிரா தான் என்பது இரு அணியினருக்கும் தெரிந்த நிலையில், ஆஸ்திரேலியா 17 ஓவர்களுக்கு முன்னதாகவே டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதன் போட்டி டிராவில் முடியவே, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்று கைப்பற்றி சாம்பியனானது.
அதுமட்டுமின்றி இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை தோல்வியை தழுவிய நிலையில், இந்தியா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வரும் ஜூன் 7 ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், இந்தப் போட்டியில் ரோகித் சர்மா விளையாடமாட்டார் என்று பிசிசிஐயின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்க்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுப்பயண போட்டிகளின் போது காயம் அடைவார் என்று எங்களிடம் கூறியிருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கேப்டனாக உச்சம் தொட்டு வரும் ரோகித் சர்மா அனைத்து வடிவங்களிலுமிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இது உண்மையில் பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ பக்கம் கிடையாது. போலியான பிசிசிஐயின் டுவிட்டர் பக்கத்திலிருந்து போன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனினும், இது குறித்து பிசிசிஐ முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆகையால், ரசிகர்கள் யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை.