ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியிலிருந்து காயத்தால் விலகும் இந்திய வீரர் யார் தெரியுமா?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெற மாட்டார் என்று கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்தப் போட்டி டிராவில் முடியும் என்று தெரிகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் ரோகித் சர்மா 35, புஜாரா 42, சுபமன் கில் 128, ரவீந்திர ஜடேஜா 28, ஸ்ரீகர் பரத் 44, அக்ஷர் படேல் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒரு கட்டத்தில் தனது 75ஆவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசிய விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்தார். இதையடுத்து, இரட்டை சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, 6 விக்கெட்டுக்கு 555 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, அடுத்து 21 ரன்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது. நிதானமாக ஆடி வந்த விராட் கோலி 186 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், இரட்டை சதம் அடிக்க நினைத்து கேட்ச் ஆன நிலையில் ஆட்டமிழந்தார். 3ஆம் நாளிலிருந்து முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற நிலையில், அவர் ஆட வரவில்லை. இதனால், இந்திய அணி 571 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து, 91 ரன்கள் பின் தங்கிய நிலையில், ஆஸ்திரேலியா விளையாடியது. அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், போட்டி டிரா செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று கைப்பற்றி கடைசி பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் வெற்றி வாகை சூடியது. அதுமட்டுமின்றி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. வரும் ஜூன் 7ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதில் ஜடேஜா களமிறங்க காரணம் என்ன? வெளியான உண்மை தகவல்!
இந்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்ட்டியில் முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார் அவருக்கு, ஸ்கேன் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஸ்கேன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதனால், 4ஆம் நாள் ஆட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. கடைசி நாளில் அவர் விளையாட வரவில்லை. இந்த டெஸ்ட் போட்டி முடிந்து அவர் சிகிச்சைக்கு செல்லும் பட்சத்தில் அவரால் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று கூறப்படுகிறது. ஏற்கனவே முகுது பகுதியில் காயம் ஏற்பட்டதை அடுத்து முதல் டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. 2ஆவது போட்டியில் தான் விளையாடினார்.
இந்த நிலையில் மீண்டும் அதே இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மட்டுமின்றி வரும் 31ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடர் முழுவதையும் அவர் தவறவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வளவு நேரம் போராடியது எல்லாமே வீணாகுதே: டிராவை நோக்கி 4ஆவது டெஸ்ட்!