ஆடாம ஜெயிச்சோமடா, சும்மா கெத்து காட்டும் இந்தியா - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி!

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
 

India Entered into WTC Final; will face Australia at Oval on June 7-11

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் வெற்றி விகிதங்களின் அடிப்படையில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் ஃபைனலுக்கு முன்னேறும். அந்தவகையில், இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று ஃபைனலுக்கு ஆஸ்திரேலிய அணி முதல் அணியாக முன்னேறிவிட்டது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு 2வது அணியாக முன்னேறும் வாய்ப்பு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய 2 அணிகளுக்குமே இருந்தது. 

ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதில் ஜடேஜா களமிறங்க காரணம் என்ன? வெளியான உண்மை தகவல்!

ஆனால், அதற்கு சில விதிமுறைகள் இருந்தது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் நேரடியாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அப்படியில்லாமல், இந்தப் போட்டி டிரா ஆனாலும், இந்தப் போட்டியில் அஸ்திரேலியா ஜெயித்தாலும், இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு இலங்கையைப் பொறுத்து அமையும்.

இவ்வளவு நேரம் போராடியது எல்லாமே வீணாகுதே: டிராவை நோக்கி 4ஆவது டெஸ்ட்!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வெற்றி பெற்றால், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி பெறும். இந்த சூழலில் இன்று நடந்த இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. அதுமட்டுமின்றி ICC World Test Championship 2021 - 2023 புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்திலிருந்து 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றதன் மூலமாக வரும் ஜூன் 7ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையில் இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் நலம் பாதித்தும் சாதித்து காட்டிய கோலி: மனைவி வெளியிட்ட உருக்கமான பதிவு!

புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 68.52 விகிதங்களுடன் 148 புள்ளிகள் பெற்று முதலிடமும், இந்தியா 60.29 விகிதங்களுடன் 123 புள்ளிகள் பெற்று 2ஆவது இடமும், தென் ஆப்பிரிக்கா 55.56 விகிதங்களுடன் 100 புள்ளிகள் பெற்று 3ஆவது இடமும், இலங்கை 48.48 விகிதங்களுடன் 64 புள்ளிகள் பெற்று 4ஆவது இடமும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா, இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றது.

சுத்தியல், ஆணி, டூல்ஸ் பாக்ஸோடு விராட் கோலியை ஒப்பிட்ட வாசீம் ஜாஃபர்: ஏன், எதற்கு தெரியுமா?

India Entered into WTC Final; will face Australia at Oval on June 7-11

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios