Asianet News TamilAsianet News Tamil

சுத்தியல், ஆணி, டூல்ஸ் பாக்ஸோடு விராட் கோலியை ஒப்பிட்ட வாசீம் ஜாஃபர்: ஏன், எதற்கு தெரியுமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 186 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், விராட் கோலியை டூல்ஸ் பாக்ஸோடு ஒப்பிட்டு பேசியுள்ளார்.

Virat Kohli Compared with Tools box by Former Indian Cricketer Wasim Jaffer
Author
First Published Mar 13, 2023, 9:49 AM IST

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்று நடக்கும் 5ஆவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா எல்லா விக்கெட்டுகளையும் இழந்தால் மட்டுமே இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அப்படியில்லை, இந்தப் போட்டி டிராவில் முடிந்தால், இலங்கை - நியூசிலாந்து தொடரையே நம்பியிருக்க வேண்டும்.

ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதில் ஜடேஜா களமிறங்க காரணம் என்ன? வெளியான உண்மை தகவல்!

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஆடிய இந்திய அணியில், ரோஹித் 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க, புஜாராவும் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒருமுனையில் நிலைத்து ஆடி சதமடித்த கில், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். 128 ரன்களுக்கு கில் ஆட்டமிழந்தார்.

ஜடேஜா 28 ரன்கள் மட்டுமே அடித்தார். அபாரமாக பேட்டிங் ஆடிய கேஎஸ் பரத் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழ, மறுமுனையில் நிலைத்து நின்று அபாரமாக பேட்டிங் ஆடிய விராட் கோலி சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28வது சதத்தை விளாசினார் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் இது கோலியின் 75வது சதம். 

கிங் எப்போதும் கிங் தான்: 1207 நாட்களுக்குப் பிறகு 75ஆவது சதம் அடித்து சாதனை படைத்த விராட் கோலி!

ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதுகின் கீழ் பகுதியில் வலி ஏற்படவே அவர் 3ஆவது நாளில் களமிறங்க வரவில்லை. ஆதலால், அவருக்குப் பதிலாக ஜடேஜா களமிறங்கினார்.  கோலியுடன் 6வது விக்கெட்டுக்கு இணைந்த அக்ஸர் படேல் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  79 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அதன் பின்னர் அஷ்வின் (7), உமேஷ் யாதவ் (0) ஆகிய இருவரும் ஆட்டமிழந்தனர். 

ஒரு கட்டத்தில் இரட்டை சதத்தை நெருங்கி கொண்டிருந்த விராட் கோலி, ஷமி மீது நம்பிக்கை வைத்து ஒவ்வொரு ரன்னாக எடுத்திருந்தால் அவர் இரட்டை சதம் அடித்திருக்கலாம். அவர், இரட்டை சதம் அடிக்க கூடாது என்பதற்காகவே ஃபீல்டர்களை பவுண்டரி எல்லையில் நிறுத்தி பவுண்டரியை தடுத்து, இரட்டை சதம் அடிக்கவிடாமல் ஆஸி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தடுத்தார். கோலியின் இத்தனை ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் அனுபத்தை பயன்படுத்தி விளையாடியிருக்கலாம். கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கும் மேலாக நிலைத்து நின்று ஆடி தூக்கி அடிக்காமல் விளையாடிய அவர் இன்னும் 14 ரன்கள் தூக்கி அடிக்காமல் விளையாடியிருக்கலாம் என்பது ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.

IND vs AUS: இரட்டை சதத்தை தவறவிட்ட விராட் கோலி.! முதல் இன்னிங்ஸில் இந்தியா 91 ரன்கள் முன்னிலை

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசீம் ஜாஃபர் தனது டுவிட்டர் பக்கத்தில் சுத்தியல், ஆணி, டூல்ஸ் பாக்ஸ் ஆகியவற்றோடு விராட் கோலியை ஒப்பிட்டு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: இது தான் விராட் கோலியின் பேட்டர். சக்தி மற்றும் கருவிகளைக் கொண்டுள்ளது. மேலும் எதை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது தெரியும் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios