ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதில் ஜடேஜா களமிறங்க காரணம் என்ன? வெளியான உண்மை தகவல்!
ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்க வேண்டிய 4ஆவது இடத்தில் ரவீந்திர ஜடேஜா களமிறங்கியதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்கள் குவித்தது. இதைத்த் தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது. இதில், ரோகித் சர்மா (35), புஜாரா (42), சுப்மன் கில் (128) ஆகியோர் ஆட்டமிழந்தனர். 4ஆவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்க இருந்த நிலையில், அவருக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார்.
ரஸ்க் சாப்பிட வேண்டிய பந்தில் ரிஸ்க் எடுத்து அவுட்டான ஜடேஜா - சதத்தை நோக்கி விராட் கோலி!
ஆனால், அதற்கு காரணம் இடது கை பேட்ஸ்மேன் என்பதால் இருக்கும் என்று நினைத்தனர். இன்றைய போட்டியில் ஜடேஜா 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் இயர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது அவர் களமிறங்கவில்லை. மாறாக, விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் களமிறங்கினார். இந்த நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி அவருக்கு முதுக்ப் பகுதியின் கீழ் வலி ஏற்பட்ட நிலையில், அவர் களமிறங்கவில்லை. நேற்றிலிருந்தே அவர் வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவருக்கு பல ஸ்கேன் எடுக்கப்பட வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ள அவரை பிசிசிஐ கண்காணித்து வருகிறது. ஏற்கனவே முதுகு வலி பிரச்சனை காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் அவர் அணியில் இடம் பெறவில்லை.
கோலி 7 வருசத்துல செஞ்சத ரோகித் சர்மா ஒரே நாள்ல செஞ்சிட்டாரு!
முதுகுவலியால் அவதிப்பட்ட அவர் அதற்கு சிகிச்சை பெற்று, பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஸ்ட்ரெந்த் & கண்டிஷனிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடுமளவிற்கு உடல் தகுதி பெற்றதால், அவர் 2வது டெஸ்ட் போட்டியில் அவர் 2ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். ஆனால், முதல் இன்னிங்ஸில் 4 ரன்னும், 2ஆவது இன்னிங்ஸில் 12 ரன்னும் எடுத்தார். 3ஆவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டும், 2ஆவது இன்னிங்ஸில் 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தார்.
பவுண்டரி அடித்து சாதனையாளர்களின் பட்டியலில் இடம் பிடித்த ரோகித் சர்மா!
தற்போது 4ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் 2 நாட்களில் பீல்டிங் செய்து வந்த அவர், 3ஆவது நாளான நேற்று களமிறங்கவில்லை. முதுகின் கீழ் பகுதியில் வலி அதிகம் ஏற்பட்டுள்ளதைத் தொடந்து ஸ்கேன் மையத்திற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.