கோலி 7 வருசத்துல செஞ்சத ரோகித் சர்மா ஒரே நாள்ல செஞ்சிட்டாரு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2 செஷன்ஸ்லயும் விக்கெட்டே எடுக்காத கேப்டனில் ரோகித் சர்மா 2ஆவது இடம் பிடித்து ஒர்ஸ்டான கேப்டன்ஸி என்ற சாதனையை படைத்திருக்கிறார்.
இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார். முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 2 நாட்களில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்கள் குவித்தது. இதில் உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோர் சதங்கள் விளாசினர். கவாஜா 180 ரன்களும், க்ரீன் 114 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து 208 ரன்கள் வரையில் சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பவுண்டரி அடித்து சாதனையாளர்களின் பட்டியலில் இடம் பிடித்த ரோகித் சர்மா!
இவர்கள் ஜோடியை பிரிக்க முடியாமல் அஸ்வின், ஜடேஜா, படேல், யாதவ், ஷமி என்று ஒவ்வொருவரும் படாதபாடு பட்டனர். ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு தான் கவாஜா - க்ரீன் காம்பினேஷன் இந்திய பவுலர்களுக்கு கஷ்டமாக அமைந்துவிட்டது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை முதல் நாளின் ஒரு செஷன்ஸிலும், 2ஆவது நாளின் முதல் செஷன்ஸிலும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியால் விக்கெட் கைப்பற்ற முடியவில்லை.
விக்கெட்டே விழ கூடாது; ஆஸ்திரேலிய பவுலர்களை வெறுப்பேத்த வேண்டும் - அஜித் அகர்கர் அறிவுரை!
இப்படி ஒரே நாளில் 2 செஷன்ஸிலும் விக்கெட் எடுக்காத கேப்டன் என்ற மோசமான சாதனையை விராட் கோலிக்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன்னதாக விராட் கோலி கேப்டனாக இருந்த 7 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் 2 செஷன்ஸிலும் விக்கெட் கைப்பற்றவில்லை. அவர் 7 ஆண்டுகளில் செய்த மோசமான சாதனையை ரோகித் சர்மா ஒரே நாளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் செய்துள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா 35 ரன்கள் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் அவர் 21 ரன்கள் எடுத்திருந்த போது சர்வதேச கிரிக்கெட்டில் 17003 ரன்களை கடந்து சாதனையாளர்களின் பட்டியலில் இணைந்தார். இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, எம் எஸ் தோனி, சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், விரேந்திர சேவாக் ஆகியோர் 17 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கவாஜா மீது பந்தை எறிந்த கேஎஸ் பரத்: டேய் சும்மா இருடா என்று திட்டிய விராட் கோலி!