41 வயதில் பாடிபில்டிங் சாம்பியன்: தைராய்டுக்காக ஜிம்மிற்கு சென்ற 2 மகன்களின் தாயாருக்கு கிடைத்த பரிசு!
மத்தியப்பிரதேசத்தில் நடந்த இந்தியன் பாடிபில்டிங் ஃபெடரேஷன் சாம்பியன்ஷிப் போட்டியில் 41 வயதான பிரதீபா தப்லியால் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் பகுதியைச் சேர்ந்தவர் 41 வயதான பிரதீபா தப்லியால். இவருக்கு 17 மற்றும் 15 வயதில் இரு மகன்கள். இருவரும் டேராடூனில் உள்ள பள்ளியில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதீபா தப்லியால், மத்தியப்பிரதேசத்தில் உள்ள ரத்லம் பகுதியில் இந்தியன் பாடிபில்டிங் கூட்டமைப்பின் சார்பாக நடந்த பாடிபில்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட பிரதீபா 13ஆவது தேசிய சீனியர் பெண்களுக்கான பாடிபில்டிங் சாம்பியன்ஷிப் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.
கோலி 7 வருசத்துல செஞ்சத ரோகித் சர்மா ஒரே நாள்ல செஞ்சிட்டாரு!
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தேன். தைராய்டு அளவு 5லிருந்து 50ஆக அதிகரித்ததைத் தொடந்து மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்தேன். அவர் என்னை பரிசோதனை செய்து, எனது கணவர் பூபேஷின் உதவியுடன் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்ய தொடங்கினேன். ஜிம்மிற்கு சென்ற ஒரு சில மாதங்களிலேயே உடல் எடையை 30 கிலோ வரையிலும் குறைத்தேன்.
இதையடுத்து, கடந்த ஆண்டு சிக்கிம் பகுதியில் நடந்த பாடிபில்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். இந்தப் போட்டியில் 4ஆவது இடம் பிடித்து, உத்தரகாண்ட்டின் முதல் பெண் தொல்முறை பாடிபில்டர் என்ற பெருமையை பெற்றார். முதல் முறையாகபோட்டியில் பங்கேற்கும் போது எனக்கு தயக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பாடிபில்டருக்குரிய உடைகளை அணிந்து கொண்டு போட்டிகளில் கலந்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.
விக்கெட்டே விழ கூடாது; ஆஸ்திரேலிய பவுலர்களை வெறுப்பேத்த வேண்டும் - அஜித் அகர்கர் அறிவுரை!
இதைத் தொடர்ந்து பிரதீபாவின் கணவர் பூபேஷ் கூற்யிருப்பதாவது: ஆசியா மற்றும் உலக பாடிபில்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள தயாராகி வருகிறார். பிரதீபாவின் பள்ளி மற்றும் கல்லூரியில் அவர் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக இருந்துள்ளார். அவர், இளமைப் பருவத்தில் கைப்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாடியுள்ளார். திருமணத்திற்கு முன்னதாக மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கான அணியை வலி நடத்தியுள்ளார்
இதையடுத்து, நான் சொன்னதும், தனது உடல் எடையை குறைத்து தொடர்ந்து ஜிம்மில் உடற் பயிற்சி மேற்கொண்டு பாடிபில்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வருகிறார். அவர் ஒரு விளையாட்டு வீராங்கனை என்பதால், அவரது உடலும் இதற்காக ஒத்துழைக்கிறது. சரியான உணவு பழக்க வழக்கத்தை பின்பற்றி ஜிம்மில் 7 மணி நேரம் வரையிலும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அதற்கு அவருக்கு கிடைத்த பரிசு 2ஆவது போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். விரைவில், உத்தரகாண்ட்டின் மாநில அரசின் ஆதரவு கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவாஜா மீது பந்தை எறிந்த கேஎஸ் பரத்: டேய் சும்மா இருடா என்று திட்டிய விராட் கோலி!