இவ்வளவு நேரம் போராடியது எல்லாமே வீணாகுதே: டிராவை நோக்கி 4ஆவது டெஸ்ட்!
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் 5ஆம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்தது. இதில், உஸ்மான் கவாஜா 180 ரன்களும், கேமரூன் க்ரீன் 114 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸை ஆடியது. இதில், ரோஹித் 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க, புஜாராவும் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒருமுனையில் நிலைத்து ஆடி சதமடித்த கில், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். 128 ரன்களுக்கு கில் ஆட்டமிழந்தார்.
சுத்தியல், ஆணி, டூல்ஸ் பாக்ஸோடு விராட் கோலியை ஒப்பிட்ட வாசீம் ஜாஃபர்: ஏன், எதற்கு தெரியுமா?
ஜடேஜா 28 ரன்கள் மட்டுமே அடித்தார். அபாரமாக பேட்டிங் ஆடிய கேஎஸ் பரத் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழ, மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய விராட் கோலி சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28வது சதத்தை விளாசினார் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் இது கோலியின் 75வது சதம்.
கோலியுடன் 6வது விக்கெட்டுக்கு இணைந்த அக்ஸர் படேல் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 79 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அதன் பின்னர் அஷ்வின் (7), உமேஷ் யாதவ் (0) ஆகிய இருவரும் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் இரட்டை சதத்தை நெருங்கி கொண்டிருந்த விராட் கோலி, ஷமி மீது நம்பிக்கை வைத்து ஒவ்வொரு ரன்னாக எடுத்திருந்தால் அவர் இரட்டை சதம் அடித்திருக்கலாம். அவர், இரட்டை சதம் அடிக்க கூடாது என்பதற்காகவே ஃபீல்டர்களை பவுண்டரி எல்லையில் நிறுத்தி பவுண்டரியை தடுத்து, இரட்டை சதம் அடிக்கவிடாமல் ஆஸி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தடுத்தார்.
உடல் நலம் பாதித்தும் சாதித்து காட்டிய கோலி: மனைவி வெளியிட்ட உருக்கமான பதிவு!
இதன் மூலம் நெருக்கடியான கட்டத்தில் சிக்சர் அடிக்க முயற்சி செய்து 186 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்ட நிலையில் அவர் பேட்டிங் ஆட வரவில்லை. இதன் காரணமாக இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 571 ரன்கள் எடுத்து 91 ரன்கள் முன்னிலை பெற்றது. இதைத் தொடந்து பேட்டிங் ஆட வந்த டிரேவிஸ் ஹெட் மற்றும் மேத்யூ குன்னெமன் இருவரும் நிலைத்து நின்றனர். 4ஆம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பிற்கு 3 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து 5ஆம் நாளான இன்று ஹெட் 3 ரன்னுடனும், குன்னெமன் ரன் ஏதும் எடுக்காமலும் இன்றைய ஆட்டத்தை தொடங்கினர். இதில், குன்னமென் 6 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் அஸ்வின் ஓவரில் ஆட்டமிழந்தார். ஆனால், அது டிவி ரீப்ளேவில் அவுட் இல்லை என்பது தெளிவாக இருந்தது. அதன் பிறகு மார்னஸ் லபுஷேன் களமிறங்கினார். இருவரும் பவுண்டரியாக அடித்து ஸ்கோரை உயர்த்தினர்.
21 வருடத்திற்கு பிறகு நிறைவேறிய 7 வயசு ஆசை: ரஜினியை சந்தித்து மகிழ்ந்த சஞ்சு சாம்சன்!
உணவு இடைவேளை வரையில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்துள்ளது. ஹெட் 45 ரன்னுடனும், லபுஷேன் 22 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். ஆனால், இதுவரையில் எப்படியாவது விக்கெட் எடுத்துவிட வேண்டும் என்று இந்திய வீர்ரகள் போராடி வந்த நிலையில், அந்த போராட்டம் எல்லாமே வீணாகி வருகிறது. இந்தப் போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதில் ஜடேஜா களமிறங்க காரணம் என்ன? வெளியான உண்மை தகவல்!