21 வருடத்திற்கு பிறகு நிறைவேறிய 7 வயசு ஆசை: ரஜினியை சந்தித்து மகிழ்ந்த சஞ்சு சாம்சன்!
இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து தனது நிறைவேறாத ஆசை நிறைவேறியதாக டுவிட்டரில் கூறியுள்ளார்.
கடந்த 1994 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் சஞ்சு சாம்சன். இவரது தந்தை டெல்லியில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். மேலும், டெல்லி சந்தோஷ் டிராபியில் கால்பந்து வீரராகவும் இருந்துள்ளார். டெல்லியில் போலீஸ் கான்ஸ்டபிள் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கேரளாவுக்கு சென்றுவிட்டனர். கிரிக்கெட் மட்டுமே வாழ்க்கையாக கொண்டுள்ள சஞ்சு சாம்சனின் குழந்தை பருவ கனவு என்பது, ஐபிஎஸ் அதிகாரியாக வர வேண்டும் என்பது தான். ஆரம்பம் முதலே டெல்லி போலீஸ் காலனியில் வசித்து வந்த அவருக்கு இப்படியொரு ஆசை இருந்துள்ளது.
சுத்தியல், ஆணி, டூல்ஸ் பாக்ஸோடு விராட் கோலியை ஒப்பிட்ட வாசீம் ஜாஃபர்: ஏன், எதற்கு தெரியுமா?
கடந்த 2007 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த அண்டர் 13 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் கேரளா அணியின் கேப்டனாக இருந்து 5 போட்டியில் 4 சதங்கள் உள்பட 973 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது தட்டிச் சென்றார். இப்படி பல போட்டிகளில் பங்கேற்ற சஞ்சு சாம்சன், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2015 ஆம் ஆண்டு நடந்த டி20 போட்டியில் அம்பத்தி ராயுடுவுக்குப் பதிலாக அணியில் இடம் பெற்று விளையாடினார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் இடம் பெற்று விளையாடினார். 2021 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அறிமுகமான இவர், நியூசிலாந்துக்கு எதிராக 2022 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் போட்டியில் கடைசியாக விளையாடினார்.
ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதில் ஜடேஜா களமிறங்க காரணம் என்ன? வெளியான உண்மை தகவல்!
இப்படி தொடர்ந்து அணியில் இடம் பெற்று அதன் பிறகு நீக்கப்பட்டு வந்த சஞ்சு சாம்சன் 11 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று, 330 ரன்களும், 16 டி20 போட்டிகளில் விளையாடி 296 ரன்களும் எடுத்துள்ளார். இதுவரையில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. ஆனால், ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அனிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாடி தோல்வியை தழுவியது.
கிங் எப்போதும் கிங் தான்: 1207 நாட்களுக்குப் பிறகு 75ஆவது சதம் அடித்து சாதனை படைத்த விராட் கோலி!
கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட சஞ்சு சாம்சன் 7 வயது முதல் ரஜினிகாந்தின் தீவிர ரசிகனாக இருந்துள்ளார். அப்போது ஒரு நாள் அவரது பெற்றோரிடம், இன்று இல்லையென்றால், என்றாவது ஒரு நாள் நான் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்திப்பேன் என்று கூறியிருக்கிறார். கடைசியாக அவர் சொன்னது நேற்று நிறைவேறியுள்ளது. அதுவும், 7 வயசு ஆசை 21 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறியுள்ளது. கடந்த லாக்டவுனின் போது தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், இந்த லாக்டவுன் காலத்தைரஜினிகாந்தின் படங்கள் பார்த்தே நேரத்தை போக்கினேன் என்று கூறியிருந்தார்.
IND vs AUS: இரட்டை சதத்தை தவறவிட்ட விராட் கோலி.! முதல் இன்னிங்ஸில் இந்தியா 91 ரன்கள் முன்னிலை
இந்த நிலையில், சஞ்சு சாம்சன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: ஏற்கனவே 7 வயதில் ரஜினியின் ரசிகன். நான் என் பெற்றோரிடம் சொன்னேன், பாரு ஒரு நாள் ரஜினி சாரை அவங்க வீட்டுக்கு போய் சந்திக்கிறேன். 21 வருடங்களுக்கு பிறகு, தலைவர் என்னை அழைத்த அந்த நாள் வந்துவிட்டது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
வரும் 31 ஆம் தேதி ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து, வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர் கொள்கிறது. ராஜஸ்தான் அணியில் ஷிம்ரான் ஹெட்மயர், ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், டிரெண்ட் போல்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சகால், பிரசித் கிருஷ்ணா, ரியான் பராக், கருண் நாயர், நவ்தீப் சைனி, டேரில் மிட்செல், ஷுபம் ஹார்வல் ஆகியோர் பலர் இடம் பெற்றுள்ளனர்.