இலங்கையின் கனவு கோட்டையை தகர்த்து இந்தியாவுக்கு வழிகாட்டிய நியூசிலாந்து - முதல் டெஸ்டில் த்ரில் வெற்றி!
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி முதன் இன்னிங்ஸில் 355 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 87 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதையடுத்து நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ் ஆடியது. இதில், டேரில் மிட்செல் 102 ரன்கள் குவித்ததன் மூலமாக நியூசிலாந்து 373 ரன்கள் குவித்தது. பின்னர், 18 ரன்கள் பின் தங்கிய நிலையில் இலங்கை 2ஆவது இன்னிங்ஸ் ஆடியது. இதில் மேத்யூஸ் 115 ரன்கள் எடுக்க இலங்கை அணி 302 ரன்கள் எடுத்தது. பின்னர் 284 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட நியூசிலாந்து 2ஆவது இன்னிங்ஸை ஆடியது.பரபரபாக சென்று கொண்டிருந்த இந்தப் போட்டியின் 4ஆம் நாள் முடிவில் நியூசிலாந்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்திருந்தது. இதில், கேன் வில்லியம்சன் 7 ரன்களுடனும், டாம் லாதம் 11 ரன்களுடன் 5ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதில் ஜடேஜா களமிறங்க காரணம் என்ன? வெளியான உண்மை தகவல்!
டாம் கூடுதலாக 14 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹென்றி நிக்கோலஸ் 20 ரன்களில் வெளியேறினார். பின்னர் வில்லியம்சன், மிட்செல் இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் மிட்செல் 86 பந்துகளில் 4 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் விளாசி 81 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இவரைத் தொடர்ந்து பிளண்டல் 3 ரன்னிலும், பிரேஸ்வெல் 10 ரன்னிலும், டிம் சவதி 1 ரன்னிலும், ஹென்றி 4 ரன்னிலும் ஆட்டமிந்தனர்.
இவ்வளவு நேரம் போராடியது எல்லாமே வீணாகுதே: டிராவை நோக்கி 4ஆவது டெஸ்ட்!
பரபரப்பான போட்டியில் நியூசிலாந்து 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் 2 பந்துகளில் ஒவ்வொரு ரன்னாக 2 ரன்கள் எடுக்கப்பட்டது. 3ஆவது பந்தில் 2 ரன்கள் எடுக்க முயன்ற போது ஹென்றி ரன் அவுட் ஆனார். 4ஆவது பந்தில் வில்லியம்சன் பவுண்டரி அடித்தார். 5ஆவது பந்தில் ரன் எடுக்கவில்லை. கடைசி பந்தில் பைஸ் மூலமாக 1 ரன் கிடைக்கவே நியூசிலாந்து பரபரப்பான போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் இலங்கையின் கனவு கலைந்தது. இந்தியாவின் கனவு பிரகாசமானது.
உடல் நலம் பாதித்தும் சாதித்து காட்டிய கோலி: மனைவி வெளியிட்ட உருக்கமான பதிவு!
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 102 ரன்களும், 2ஆவது இன்னிங்ஸில் 81 ரன்களும் எடுத்த டேரில் மிட்செல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியா, 68.52 விகிதங்களுடன் 148 புள்ளிகள் பெற்று முதலிடமும், இந்தியா 60.29 விகிதங்களுடன் 123 புள்ளிகள் பெற்று 2ஆவது இடமும், தென் ஆப்பிரிக்கா 55.56 விகிதங்களுடன் 100 புள்ளிகள் பெற்று 3ஆவது இடமும், இலங்கை 48.48 விகிதங்களுடன் 64 புள்ளிகள் பெற்று 4ஆவது இடமும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா, இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றது.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வரும் 17 ஆம் தேதி வெல்லிங்டன் மைதானத்தில் நடக்கிறது.
சுத்தியல், ஆணி, டூல்ஸ் பாக்ஸோடு விராட் கோலியை ஒப்பிட்ட வாசீம் ஜாஃபர்: ஏன், எதற்கு தெரியுமா?