கழுத்தில் சிவப்பு துணி, நடுவில் மனைவி, மச்சான் கல்யாணத்துல குத்தாட்டம் போட்ட ரோகித் சர்மா: வைரலாகும் வீடியோ!

ரித்திகாவின் சகோரர் குணால் சஜ்தேயின் திருமண நிகழ்ச்சியின் போது ரோகித் சர்மா குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

Rohit Sharma Dance with his wife Ritika during his Brother-in-law Kunal Sajdeh wedding function

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று மும்பையில் நடக்கிறது. இதில், ரோகித் சர்மா மனைவி ரித்திகாவின் சகோதரர் குணால் சஜ்தேவியின் திருமணம் காரணமாக அவர் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா இன்றைய போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் முதல் முறையாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு கேப்டனாக செயல்படுகிறார்.

இந்தியாவுக்கு பதிலடி உண்டு: ஸ்கெட்ச் போட்டு தூக்க தயார் - ஆஸ்திரேலியா பயிற்சியாளர் பேட்டி!

Rohit Sharma Dance with his wife Ritika during his Brother-in-law Kunal Sajdeh wedding function

கடந்த 15 ஆம் தேதி ரோகித் சர்மாவின் மச்சினன் (மைத்துனன்) குணால் சஜ்தேயின் சங்கீத மற்றும் ஹஸ்தி எனப்படும் மஞ்சள் பூசும் வைபவம் நடந்தது. இதில், ரோகித் சர்மா மற்றும் ரித்திகா  இருவரும் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. நேற்றும் இன்றும் திருமண சடங்குகள் நடந்துள்ளன. இதைத் தொடர்ந்து ரித்திகாவின் சகோதரர் குணால் சஜ்தேயின் திருமணம் நடந்துள்ளது.

இதை மட்டும் ஆஸ்திரேலியா செய்துவிட்டால், அப்புறம் யாராலயும் அவர்களை தடுக்க முடியாது!

இதில், ரோகித் சர்மா மற்றும் ரித்திகா இருவரும் பாலிவுட் பாடல் ஒன்றிற்கு டான்ஸ் ஆடியுள்ளனர். இதுவரையில் பேட் பிடித்த கை இன்று சீட்டு கட்டை வீசி விளையாடும் அளவிற்கு புகுந்து விளையாடியுள்ளது. கழுத்தில் சிவப்பு நிற துணியை அணிந்து கொண்டு செம்ம ஸ்டைலாக டான்ஸ் ஆடி அசத்தியுள்ளார். இதுவரையில் ரோகித் சர்மாவை இதுவரையில் யாரும் இப்படி பார்த்திருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ரித்திகா, ரோகித் சர்மாவின் டான்ஸ் அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Rohit Sharma Dance with his wife Ritika during his Brother-in-law Kunal Sajdeh wedding function

உலக பணக்கார கிரிக்கெட்டர்கள் பட்டியலில் சச்சின், கோலி, தோனியை முந்திய முன்னாள் ஆஸி., வீரர் யார் தெரியுமா?

குணால் சஜ்தே, இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள டெலாய்ட்டின் ஸ்போர்ட்ஸ் பிசினஸ் குரூப்பில் ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டிஸ் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன், நெக்ஸஸ் கன்சல்டிங் குரூப் - ரோட்மேன் உடன் பணிபுரிந்துள்ளார். குணால் தனது பள்ளிப்படிப்பை மும்பையில் உள்ள கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளியில் பயின்றார். பின்னர் மும்பையின் ஹெச்ஆர் காமர்ஸ் அண்ட் எகனாமிக்ஸ் கல்லூரியில் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திருமண நிகழ்ச்சியைத் தொடர்ந்து, வரும் 19ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய் எஸ் ஆர் ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் 2ஆவது ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னிக்கு நான் தான் பொளந்து கட்டப் போறேன் - மழை வரும், ஆனா வராது; மேட்ச் நடக்குமா? நடக்காதா?

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios