உலக பணக்கார கிரிக்கெட்டர்கள் பட்டியலில் சச்சின், கோலி, தோனியை முந்திய முன்னாள் ஆஸி., வீரர் யார் தெரியுமா?
உலகில் பணக்கார கிரிக்கெட்டர்கள் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் எம் எஸ் தோனி ஆகியோரை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளார் என்று சி இ ஓ வேர்ல்டு மேகசீன் நிறுவனம் தவறுதலாக வெளியிட்டுள்ளது.
கிரிக்கெட்டுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. உலகில் வாழும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கிரிக்கெட் போட்டியை நேரிலும், டிவியிலும், மோபைல், லேப்டாப் என்று எல்லாவற்றிலும் கண்டு ரசித்து வருகின்றனர். இந்தியாவில் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று கிரிக்கெட் என்று கூட சொல்லலாம். கிரிக்கெட் வீரர்களுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கிரிக்கெட் விளையாடினாலும் சரி, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் சரி, அவர்களைக் கண்ட போதெல்லாம் அவர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொள்வார்கள்.
இன்னிக்கு நான் தான் பொளந்து கட்டப் போறேன் - மழை வரும், ஆனா வராது; மேட்ச் நடக்குமா? நடக்காதா?
கிரிக்கெட்டில் இந்திய பிரபலங்களைப் பொறுத்தவரையில், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிறார்கள். கிரிக்கெட் தவிர, விளம்பரங்கள் வாயிலாகவும், விளையாட்டு நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிட்டராக இருப்பதன் மூலமாகவும் எண்ணற்ற வருவாய் ஈட்டுகின்றனர். இதனால், அவர்களின் மதிப்பு பல நூறு கோடியையும் தாண்டி வருகிறது. இந்த நிலையில், சிஇஓ வேர்ல்டு மேகசீன் நிறுவனம் ஆண்டு தோறும் உல்கா பணக்கார கிரிகெட்டர்கள் யார் என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது.
சாம்பியன் மீண்டும் வருவார் - ரிஷப் பண்ட் தோள் மீது கை போட்டு ஹாயாக அமர்ந்து பேசிய யுவராஜ் சிங்!
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பட்டியலை அண்மையில் வெளியிட்டது. இதில், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, விரேந்திர சேவாக், எம் எஸ் தோனி, சச்சின் டெண்டுல்கர், ஆடம் கில்கிறிஸ்ட் என்று அனைத்து கிரிக்கெட் வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். ஆனால், இதில், யார் நம்பர் ஒன் பணக்காரர் என்று பார்த்தால், சச்சின், கோலி அப்படியில்லை என்றால் தோனி இவர்களில் யாராவது ஒருவராக தான் இருப்பார் என்று நினைத்தோம்.
India Playing XI 1st ODI: ரோகித், ஷ்ரேயாஸ் கிடையாது: ஹர்திக் பாண்டியா கேப்டன் ஓகே, யாரு சார் ஓபனிங்?
ஆனால், இவர்களை எல்லாம் ஓவர்டேக் செய்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரான ஆடம் கில்கிறிஸ்ட் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளார். அதாவது, உலக பணக்கார கிரிக்கெட்டர்கள் பட்டியலில் அதிக வருமானம் ஈட்டி நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளார். இவரது வருமானம், ரூ.3129.26 கோடி ($380 மில்லியன்). இவரைத் தொடர்ந்து 2ஆவது இடத்தில் சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார். அவரது வருவாய், ரூ.1399.55 கோடிகள் ($170 மில்லியன்).
ஹர்திக் இதை செய்தால் ரோகித்துக்கு பதிலாக அவர் தான் ஒரு நாள் கிரிக்கெட் கேப்டன் - சுனில் கவாஸ்கர்!
ஆனால், ஆடம் கில்கிறிஸ்ட் என்ற பெயரில் தொழிலதிபர் ஒருவரும் இருக்கிறார். அவர், எப் 45 என்ற பெயரில் ஜிம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது சொத்து மதிப்பும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், கணக்கு எடுப்பில் தவறு நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.அதனையடுத்து, இப்பட்டியலில் முதலிடம் பெற்றது ரூ.1399.55 கோடி சொத்துக்கள் கொண்ட சச்சின் டெண்டுல்கர் தான் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சச்சினைத் தொடர்ந்து ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக திகழும் எம் எஸ் தோனி ரூ.1000 கோடி ($115 மில்லியன்) வருவாய் ஈட்டுகிறார். இவரைத் தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலில் ரூ.920 கோடி ($112 மில்லியன்) பெற்று அடுத்த இடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் விரேந்திர சேவாக் ரூ. 300 கோடி ($40 மில்லியன்), யுவராஜ் சிங் கிட்டத்தட்ட ரூ.288 கோடி ($ 35 மில்லியன்) பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்த வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித்தும் இடம் பெற்றுள்ளார். அவர் ரூ.247 கோடி ($ 30 மில்லியன்) வருவாய் ஈட்டுகிறார்.