India Playing XI 1st ODI: ரோகித், ஷ்ரேயாஸ் கிடையாது: ஹர்திக் பாண்டியா கேப்டன் ஓகே, யாரு சார் ஓபனிங்?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மாவுக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியாக கேப்டனாக செயல்படுவார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நாளை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா தனது மைத்துனன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால், அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளார்.
இதன் காரணமாக ரோகித் சர்மாவுக்குப் பதிலாக முதல் ஒரு நாள் போட்டிக்கு மட்டும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுவார். ஷ்ரேயாஸ் ஐயர் முதுகு வலி பிரச்சனையால் இந்த போட்டியில் விளையாடவில்லை. எனினும், அவர் தொடரிலிருந்து விலகுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ரோகித் இல்லாத நிலையில், இஷான் கிஷான் தான் சும்பன் கில்லுடன் இணைந்து ஓபனிங் இறங்குவார் என்று தெரிகிறது. இதற்கு முன்னதாக வங்கதேசத்திற்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் காயம் காரணமாக விலகிய ரோகித் சர்மாவுக்குப் பதிலாக அணியில் இடம் பெற்ற இஷான் கிஷான் 210 ரன்கள் இரட்டை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவதாக விராட் கோலி களமிறங்குவார். இவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்க வேண்டிய இடத்தில் அவர் விளையாடாத நிலையில், அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறங்குவார் என்று தெரிகிறது. மிடில் ஆர்டரில் கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் இறுதியில் வாஷிங்டன் சுந்தர் அல்லது ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சகால் ஆகியோர் களமிறங்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆடும் லெவன் இதோ...
- சுப்மன் கில்
- இஷான் கிஷான்
- விராட் கோலி
- சூர்யகுமார் யாதவ்
- கேஎல் ராகுல்
- ஹர்திக் பாண்டியா
- ரவீந்திர ஜடேஜா
- வாஷிங்டன் சுந்தர் அல்லது ஷர்துல் தாக்கூர்
- முகமது ஷமி
- முகமது சிராஜ்
- குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சகால்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றால், வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின்னதாக முழு நேர ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட வாய்ப்பு உண்டு.